Viral

"வெயில்ல படுத்து தூங்குனா இப்படிலாம் நடக்குமா?.." PLASTIC போல் உரிந்த இளம்பெண்ணின் நெற்றி !

பொதுவாக மனிதர்கள் தங்களது உடல்நலத்தில் அக்கறை கொண்டவர்கள். அதிலும் குறிப்பாக முகம், சருமம் போன்றவைகளில் மேலும் அக்கறை காட்டி வருபவர்கள். இதில் வெளிநாட்டவர்கள், தங்களது சருமங்களை பாதுகாக்க பல க்ரீம்கள், சன் பாத் போன்றவை பயன்படுத்துகிறார்கள்.

மருத்துவர்கள் சூரிய ஒளியில் இருந்து நமது சருமங்களை பாதுகாக்க சன் லோஷன் உள்ளிட்டவையை பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். இங்கே ஒரு பெண் வெயிலில் சுமார் 30 நிமிடங்கள் தூங்கியதால் அவரது நெற்றி பிளாஸ்ட்டிக் போல் சுருங்கியுள்ளது.

அழகு கலை நிபுணரான சிரின் முராட் (வயது 25) என்ற இளம்பெண், தனது விடுமுறையை கழிக்க பல்கேரியாவுக்கு சென்றிருந்தார். அங்கே கடற்கரை ஓரமாக படுத்துக்கொண்டு சன்பாத் எடுத்தார். ஆனால் அவர் சன் லோஷன் எதுவும் பயன்படுத்தாமல் சுமார் 30 நிமிடங்கள் அங்கே உறங்கியுள்ளார்.

சிறிது நேரத்திற்கு பிறகு கண் முழித்த அவர், தனது முகத்தை பார்த்தபோது அது சிவந்திருந்தது. இதனை கண்ட அவர் சரியாகிவிடும் எண்ணி, மீண்டும் சுமார் 21 டிகிரி செல்ஸியஸ் அளவிலான வெயிலில் படுத்துள்ளார்.

இதையடுத்து மறுநாள் அவர் தனது முகத்தை பார்த்தபோது, அவரது நெற்றி பிளாஸ்டிக் போல் உரிந்து காணப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது பெற்றோரிடம் இது குறித்து தகவல் தெரிவித்திருக்கிறார்.

இருப்பினும் இது குறித்து சிகிச்சை பெற மருத்துவமனைக்கு செல்லாத அவர், அப்படியே விட்டிருக்கிறார். நாளடைவில் அந்த தோல், தானாக உரிந்து வந்துள்ளது. இருப்பினும் அவரது முகத்தில் சில புள்ளிகள் நிறமாற்றத்துடன் காணப்படுகிறது. இதுபோன்ற விஷயங்கள் ஆபத்தான ஒரு வகை தோல் புற்றுநோயாக கூட இருக்கலாம்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிரின் கூறும்போது, "சன்ஸ்க்ரீன் பயன்படுத்தாமல் வெயிலில் உறங்கியதால் எனது தோல் உரியும் நிலைக்கு வந்தது. ஆனால், சிறிது நாளிலே, அது தானாக உரிந்து வந்ததால் தற்போது எனக்கு அது வலி இல்லாமல் இருக்கிறது. ஏதோ புதிதாக சதை உருவானது போல் உணர்கிறேன்" என்றார்.

இவரது இந்த நிலை தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வரும் நிலையில், நீண்ட நேரம் சருமங்களை எந்தவித பாதுகாப்பும் இன்றி வெயிலில் வைத்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நேரக்கூடும் என்றும், எனவே சூரிய கதிர்களிடமிருந்து நமது சருமங்களை லோஷன் போன்றவைகள் மூலம் பாதுக்காக்க வேண்டும் என்றும் அழகு கலை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.