Viral

Disappointment.. இதன் அர்த்தம் உங்களுக்கு தெரியும்: ஆனால் இந்த வார்த்தை உருவான விதம்?

Disappointment!

இந்த வார்த்தை உருவான விதத்தில் ஒரு சுவாரஸ்யம் உண்டு. Disappoint என்ற வார்த்தைக்கு எதிர்வார்த்தை என்னவாக இருக்கும்?

Advantage-க்கு எதிர்வார்த்தை disadvantage எனில் disappointment-க்கு எதிர்வார்த்தை appointment-தானே. Disappoint-க்கு எதிர் appoint-தானே.

Appointed என்கிற வார்த்தை 14ம் நூற்றாண்டில் உருவானதாம். பிரெஞ்சு வார்த்தையான 'a pointer' என்கிற வார்த்தையிலிருந்து வந்ததாம். Apointer என்றால் a point என்ற வார்த்தைகளின் சுருக்கமாம். அதாவது ஒரு பிரச்சினையை சுருக்கி அதன் அடிப்படையை தெரிவிப்பது apointer-ஆம். இதை ஆங்கிலம் ஒரு வேலைக்கு ஒருவரை நியமிப்பது அல்லது ஒரு கருத்தை நிறுவுவது என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தத் தொடங்கியது.

உதாரணமாக ஓரிடத்தில் ஒருவரை சந்திக்க appointment வாங்கிட்டால் அதை நீங்கள் மாற்ற முடியாது. கூடாது. அந்த நேரம் நிறுவப்பட்டுவிட்டது. அதை நீங்கள் மீறக் கூடாது. அதை மீறினால் உங்கள் சந்திப்பின் நோக்கமே நீர்த்து விடும்.

Disappoint என்கிற வார்த்தை 16ம் நூற்றாண்டில் உருவானதாம். Desapointer என்கிற பழைய பிரெஞ்சு வார்த்தையிலிருந்து உருவானதாம். Desapointer என்றால் கொடுக்கப்பட்டப் பணியிலிருந்து அப்புறப்படுத்துவதாம். நிறுவப்பட்ட ஒரு நேரம் அல்லது கருத்து போன்றவற்றை மறுப்பது, நிராகரிப்பது அல்லது மீறுவது ஆகும்.

ஆகவே நம் கேள்வி ஒன்றுதான்.

Why you have to appoint an idea or a concept of yourself onto someone in the first place?

உங்களுக்கு சொந்தமான கருத்தை அல்லது விருப்பத்தை அடுத்தவரிடம் நீங்கள் சொல்லலாம். அதை ஏற்பதும் ஏற்காமல் போவதும் முழுக்க அவரது விருப்பமே.

Appoint என்கிற வார்த்தையின் அடிப்படையே ஒரு குறிப்பிட்ட வேலையை ஒருவருக்குக் கொடுத்துவிட்டு, அந்த வேலைக்கான விளைவை அவரிடம் எதிர்பார்ப்பது. நிர்ப்பந்திப்பது. அதை அவர் செய்யவில்லை எனில் நீங்களோ அவரோ disappoint ஆவது அந்தச் செயலின் மிக இயல்பான விளைவு.

ஆகவே ஓர் உறவை, ஒரு வேலையை, ஒரு கருத்தை நீங்கள் ஒருவரிடம் appoint செய்யும்போது அந்த வார்த்தைக்கு முன் dis என்கிற மூன்று எழுத்துகளை சேர்ப்பதற்கான சாத்தியத்தையும் சேர்த்தே உருவாக்குகிறீர்கள்.

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.

எனவே நீங்கள் நெகிழ்பவராக இருங்கள். உங்கள் நெகிழ்வுக்கான காரணங்களை உங்களுக்குள்ளேயே கொள்ளுங்கள். வெளியே ஒருவரிடம் கொடுக்காதீர்கள். ஒருவேளை நிராகரிப்போ ஏமாற்றமோ நேர்ந்தால் அதை பெரும் பளுவாக சுமக்காதீர்கள்.

மேட்டில் ஓடும் நீர் பள்ளம் கண்டால் விரையும் இயல்புதான் நிராகரிப்பும் ஏமாற்றமும் எனக் கொள்ளுங்கள்.

பள்ளம் இருக்குமென பயந்து நீர் ஓடாமல் இருப்பதில்லை. பள்ளத்துக்கு போய்விடுமே என்கிற கோபத்தில் மேடும் நீரை சுமக்காமல் இருப்பதில்லை.

Maturity என்பது புன்னகை மட்டும்தான். பழி பேசாது, கழிவிரக்கம் கொள்ளாது, வன்மம் பாராட்டாது இயல்பாக மனிதத்துக்கான ஊற்றாக தொடர்வதே மெச்சூரிட்டி.

Appoint செய்யும் வரை disappoint-க்கான சாத்தியம் இருந்து கொண்டே இருக்கும். முதல் மூன்றெழுத்தின் அச்சத்தில் நமக்குள்ளாக சுருங்கி விடுதலும் கூடாது.

நிறுவிக் கொள்ளாத (Appoint செய்து கொள்ளாத) love, happiness முதலிய வார்த்தைகளை வாழ்க்கையில் தேடிப் பாருங்கள். வேறு வார்த்தைக் கிடைத்து விடும்.

Maturity!

Also Read: சுணக்கம் கொடுக்கதாக web series - Breaking Bad சீரிஸ்ஸின் யுனிவெர்ஸ்ஸை கொண்ட Better Call Saul : விமர்சனம்!