Viral
அ.தி.மு.க ஆட்சியின் அவலங்கள் - குறைகளை பூர்த்தி செய்த தி.மு.க அரசு - போலிஸாரும் கொண்டாடும் ‘டாணாக்காரன்’!
இயக்குநர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த படம், 'டாணாக்காரன்'. இந்தப் படம் திரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. காவலர் பயிற்சிப் பள்ளியில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் விவாதத்தை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்லாது குடிமக்களை மட்டுமல்ல, காவலர்களையே கூட மனிதர்களாத மதிக்காத துறைதான் காவல்துறை. ஆனாலும் எந்த எதிர்ப்பும் கிளம்புவதில்லை. எப்படி இத்தனை குரூரமானவர்களாக, ஏவலாட்களாக, ரோபோக்களாக அவர்கள் மாற்றப்படுகிறார்கள் என்கிற கேள்விக்கு காவல்துறை முதன்முதலாக இந்திய ஒன்றியத்தில் உருவாக்கப்பட்ட வரலாறைச் சொல்லி படத்தைத் துவக்குகிறார் ‘டாணாக்காரன்’ பட இயக்குநர் தமிழ்.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல், வாகனங்களுக்கு தீவைப்பு, சாமாணியர்களின் லாக்கப் மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் என காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
காவல்துறையின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் அளவுக்கு நடந்துகொண்ட சம்பவங்களும் ஏராளம் உண்டு. அதன்பிறகு தமிழ்நாட்டின் மீண்டும் ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, பெண் காவலர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கி உத்தரவிட்டது.
மேலும், காவலர்கள் வாரவிடுமுறை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை அரசு வழங்கியுள்ளது. அதேநேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள காவல்நிலையங்களில் முதல்வர் முதல்வர் உயரதிகாரிகள் வரை நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வழக்குகளை துரிதமாக எடுக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுத்தியுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 43 காவலர் பயிற்சி பள்ளியிலும் 'டாணாக்காரன்' திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அங்கு பயிற்சி பெற்று வரும் காவலர்கள் அனைவருமே படத்தை கண்டுகளித்துள்ளனர். 'டாணாக்காரன்' திரையிடலைப் பார்த்துவிட்டு காவலர்கள் பலரும் இயக்குநருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். மேலும், இப்போது புகார் பெட்டி, டாய்லெட் வசதிகள் என எந்த அளவுக்குக் காவலர் பயிற்சி பள்ளி மாறியிருக்கிறது என்பதையும் எடுத்துரைத்துள்ளனர்.
Also Read
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!