Viral
‘சன்னி லியோனின் தீவிர ரசிகரா நீங்கள்? இந்த தள்ளுபடி உங்களுக்குதான்’ - சிக்கன் கடைக்காரரின் நூதன விற்பனை!
பாலிவுட் நடிகையான சன்னி லியோனுக்கு இந்தியை கடந்து உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழிலும் சன்னி லியோன் படங்களில் நடித்து வருகிறர்.
இப்படி இருக்கையில், கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் இளைஞன் ஒருவர் Dk என்ற பெயரில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். அந்த நபர் சன்னி லியோனின் தீவிர ரசிகராக அறியப்படுகிறார்.
இந்த நிலையில் தனது கடையில் விற்கப்படும் கோழிக்கறிகளை வாங்கும் சன்னி லியோன் ரசிகர்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி என்று அறிவித்திருக்கிறார்.
ஆனால் அதற்கு மூன்று நிபந்தனைகளையும் முன் வைத்திருக்கிறார்.
அதன்படி,
1) நடிகை சன்னி லியோனை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பின்தொடர்ந்திருக்க வேண்டும்.
2) சன்னி லியோனின் 10 புகைப்படங்களையாவது செல்போன் கேலரியில் வைத்திருக்க வேண்டும்.
3) சன்னி லியோனின் அனைத்து சமூக வலைதளங்களில் அவரது பதிவுகளும், லைக், கமெண்ட் செய்திருக்க வேண்டும்.
இதுதான் அந்த சிக்கன் கடை உரிமையாளரான இளைஞனான பிரசாத்தின் நிபந்தனைகள்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர், “பலரும் சன்னி லியோனை தவறாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருவதோடு, ஆதரவில்லாமல் இருப்போருக்கு தன்னுடைய சம்பளத்தின் மூலம் உதவி வருகிறார். எனவே தான் என் பங்கிற்கு அவருடைய ரசிகனாக இந்த ஆஃபரை அறிவித்துள்ளேன்” என பிரசாத் கூறியிருக்கிறார்.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?