Viral
சாலையோர சிறுவனுக்கு ஆசிரியராக மாறிய போக்குவரத்து போலிஸ்.. வைரல் புகைப்படத்தின் பின்னணி?
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள பாலிகங்கே ஐடிஐ சாலையில் இருக்கம் உணவு கடையில் பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இவரது 8 வயது மகன் அரசு பள்ளியில் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் சாலையோரத்திலேயே தங்கி வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து காவல் பணியில் ஈடுபட்டு வரும் பிராகஷ் கோஷ் என்பவருடன் இவர்களக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்தப் பெண் தனது மகனின் கல்வி கணவுகள் குறித்து, கவலையுடன் கூறியுள்ளார். இதைக்கேட்ட அவர் தன்னால் முடிந்த உதவியை செய்வதாக கூறியுள்ளார்.
பிறகு அடுத்தநாளில் இருந்து தனது பணி முடிந்த உடனே, அச்சிறுவனை அழைத்து பாடம் சொல்லி கொடுத்துள்ளார். இதைப்பார்த்து அவரது தாய் மகிழ்ச்சியடைந்துள்ளார். மேலும் தினந்தோறும் பிராகஷ் கோஷ், அந்த சிறுவனுக்கு தனது வேலையுடன் சேர்ந்து பாடம் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இவரின் இந்த செயலுக்கு மேற்குவங்க காவல்துறையும் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்நிலையில்தான் சிறுவனுக்கு,பிராகஷ் கோஷ் பாடம் எடுக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் பிராகஷ் கோஷிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
மக்களின் உயிரைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்குமா தவெக? : கனிமொழி கேள்வி!
-
ஞானேஷ் குமார் 48 மணிநேரத்திற்குள் பதவி விலக வேண்டும்! : அபிஜித் திப்கே எச்சரிக்கை!
-
நேற்று விஜய் அறிவுறுத்தல்.. ஆனா இன்று.. ஒரே நாளில் தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் அடுத்தடுத்து மின்வெட்டு!
-
தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் சட்டென Power Cut... TENSION ஆன செங்கோட்டையன்!
-
BoyFriend உடன் சேர்ந்து Blackmail.. மிரட்டி பணம் பறிப்பு.. தவெக பிரமுகர், BIGG BOSS வர்ஷினி வெங்கட் கைது!