Viral
’ஒரு பக்கெட் பிரியாணிக்கு விலைமதிக்க முடியாத பெட்ரோல் இலவசம்’ : தொப்பி வாப்பா பிரியாணி கடை அதிரடி ஆஃபர்!
5 மாநில தேர்தல் முடிந்ததை அடுத்து கடந்த மாதத்தில் இருந்து தினமும் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு உயர்த்தி வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110ஐ கடந்துள்ளது. அதேபோல் டீசல் விலையும் ரூ.100 கடந்துவிட்டது.
இதுபோதாது என்று சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும் சுங்க கட்டணத்தையும் ஒன்றிய அரசு உயர்த்தியதன் காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.
இப்படி, நான்கு புறங்களில் இருந்தும் கடுமையாக விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என தொப்பி வாப்பா பிரியாணி கடை விளம்பரம் செய்துள்ளது.
ஏப்ரல் 12ம் தேதி மட்டும் இந்த சிறப்பு சலுகை இருக்கும் என்றும், முதல் 50 நபர்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர் கிடைக்கும் என்றும் தொப்பி வாப்பா பிரியாணி கடை அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள தங்களின் அனைத்து கிளை கடைகளிலும் இந்த ஆபர் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொப்பி வாப்பா பிரியாணி கடை தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்திலும் விளம்பரம் செய்துள்ளது. இந்த விளம்பரத்தை நெட்டிசன்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!