Viral

பெட்டிக்கடை வைப்பதில் தகராறு.. ‘Gang War’ சண்டையால் கலவர பகுதியாக மாறிய காவல் நிலையம் - நடந்தது என்ன?

புதுச்சேரி வாணரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கவுசல்யா என்பவர் மணக்குள விநாயகர் கோவில் வாசலில் பூ விற்று வருகிறார். உப்பளம் நேதாஜி நகரைச் சேர்நத்வர் வள்ளி, அதேஇடத்தில் சோளம் விற்பனை செய்கிறார். இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று இரவு கவுசல்யா, வள்ளி இருவரும் மீண்டும் தகராறில் ஈடுப்பட்டுள்ளனர். இதை அறிந்த வள்ளிக்கு ஆதரவாக அவரது மகன் துளசி மற்றும் சில வாலிபர்களும், கவுசல்யாவுக்கு ஆதரவாக அவரது சகோதரர் நாராயணன் மற்றும் சில வாலிபர்கள் வந்தனர். இரு தரப்பும் மணக்குள விநாயகர் கோவில் அருகே மோதி கொண்டது. விற்பனைக்கு வைத்திருந்த பொருட்களை சாலையில் கொட்டி வீசினர். 

இரு தரப்பில் காயமடைந்தவர்கள் ரத்தம் சொட்ட சொட்ட பெரியக்கடை போலிஸ் நிலையத்திற்கு வந்தனர். போலிஸ் நிலையத்தில் 2 காவலர்கள் மட்டுமே பணியில் இருந்ததால், இரு தரப்பும் போலிஸ் நிலையம் எதிரே கற்கலை வீசி தாக்கி கொண்டனர்.

இதில், துளசியின் மண்டை உடைந்தது. போலிஸ் நிலையத்திற்கு உள்ளே அழைத்து செல்லப்பட்ட இரு தரப்பும் மீண்டும் மோதி கொண்டது. போலிஸ் நிலைய வாசலில் வைத்திரிந்த பூ ஜாடிகளை தூக்கி வீசியும், சாலையோரம் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்களையும் உடைத்தனர். இதனால் பெரியக்கடை காவல் நிலையம் கலவர பகுதியாக மாறியது. பணியில் இருந்த 2 போலிஸாரால் இதை தடுக்க முடியவில்லை. 

இதனையடுத்து மற்றொரு காவல் நிலையமான ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று லேசான தடியடி நடத்தி கலவரக்காரர்களை துரத்தினர். காயமடைந்த துளசி, வள்ளி, அபி, நாராயணன், கவுசல்யா உட்பட 6 பேர் புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நகரின் முக்கிய சாலையில் உள்ள காவல் நிலையத்தில் இருதரப்பினரும் மோதிக்கொண்டதால் காவல் நிலையம் கலவரப் பகுதியாக மாறியது.

Also Read: பிரச்சாரத்திற்கு அனுமதி இல்லை.. பாஜக நிர்வாகியின் மனு தள்ளுபடி : ₹10000 அபராதம் விதித்து ஐகோர்ட் உத்தரவு!