Viral
ஏய்ய்.. நீ என்ன புலியா... வம்புக்கு இழுத்து சண்டையிடும் காட்டு யானைகள்; வால்பாறையில் நடந்த சுவாரஸ்யம்!
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
அடிக்கடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து மனித-வன உயிரின மோதலை ஏற்படுத்துவதோடு, பயிர்களையும் நாசம் செய்து வருகின்றன.
இந்நிலையில் வால்பாறை புதுக்காடு எஸ்டேட் பகுதியில் இரு காட்டு யானைகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொள்ளும் வீடியோவினை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து ரசித்து வீடியோ எடுத்துள்ளனர். இக்காட்சியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இக்காட்சியில் இரு காட்டு யானைகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொள்கின்றன. அதில் ஒரு யானை விலகிச்செல்ல முற்பட மற்றொரு யானை வா...வந்து பாரு.. மோதித்தான் பாரு.. என்பதை போல மீண்டும் மீண்டும் சென்று விலகிச்செல்லும் யானையினை வம்பிற்கு இழுத்து சண்டையிடுகிறது.
இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் யானைகளின் சண்டையினை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
Also Read
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!
-
ஒரே ஆண்டில் 17,702 பேருக்கு அரசு வேலை : சாதனை படைத்த TNPSC!
-
”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!