Viral

2021ஆம் ஆண்டில் மட்டும் ரூ.2,250 கோடி சம்பாதித்த டாப் 10 YOUTUBERS.. இவர்களைப் பற்றித் தெரியுமா?

உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களுக்கு என்று தனியாக ஒரு YouTube சேனலை துவங்கி அதில் வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். இதில் சினிமா, விளையாட்டு என பல்வேறு விதங்களில் சேனல்கள் உள்ளன.

இப்படிச் செயல்பட்டு வரும் YouTube சேனல்களின் மூலம் அதிகமாக சம்பாதிக்கும் முதல் 10 பேரின் பெயரை பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் இவர்கள் 10 பேர் மட்டும் 300 மில்லியன் சம்பாதித்துள்ளனர். அதாவது இந்திய மதிப்பில் ரூ.2,250 கோடி.

இந்த 10 பேரில் 23 வயதாகும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம்மி டொனால்ட்சன் என்ற இளைஞர்தான் முதலிடத்தில் உள்ளார். இவர் மிஸ்டர் பீஸ்ட் என்கிற பெயரில் YouTube சேனல் நடத்தி வருகிறார். இவரின் Squid Game தொடரின் மறுஉருவாக்க வீடியோ மிகவும் பிரபலமானது. கடந்த ஆண்டில் மட்டும் இந்திய மதிப்பில் சுமார் 400 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளார்.

இதற்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் தொழில் முறை குத்துச்சண்டை வீரர் ஜேக்பால் உள்ளார். இவர் தனது குத்துச்சண்டை பதிவுகளை யூடியூபில் பதிவேற்றி வருகிறார். இதன் மூலம் ரூ.300 கோடி சம்பாதித்துள்ளார்.

மூன்றாவது இடத்தில் மார்க்பிலியர் உள்ளார். கேம் வடிவமைப்பாளரான இவர் தனது யூடியூப் சேனல் வழியாக 2021ஆம் ஆண்டில் 200 கோடி பெற்றுள்ளார். அதேபோல், நான்காவது இடத்தில் ரெட் மற்றும் லிங்க் என்பவர் உள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து விவாத நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

ஐந்தாவது இடத்தில் நாதன் கிரஹாம் என்ற Minecraft வீரர் உள்ளார். இவர் இந்த பட்டியலில் முதல் முறையாக இடம் பெற்றுள்ளார். இப்படி ஆறாவது இடத்தில் நாஸ்தியா, ஏழாவது இடத்தில் ரியான் காஜி ஆகியோர் உள்ளனர்.

இதையடுத்து எட்டாவது இடத்தில் டியூட் பெர்ஃபெட்டும், ஒன்பதாவது இடத்தில் லோகன் பாலும், பத்தாவது இடத்தில் பிரஸ்டன் ஆர்ஸ்மெண்டும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் 10 பேரும் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் டாப் டென் பட்டியலில் இடம்பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “ரோடா இது..? எங்க வீட்டுக்கு யாருமே வர்றதில்ல” : நிருபராக மாறிய சிறுமி - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?