Viral

’பாட்டால் வந்த வேட்டு’ : திருமணத்தன்றே விவாகரத்து செய்த மணமகன் - ஈராக்கில் நடந்த விநோத சம்பவம்!

விநோதமான காரணங்களை முன்வைத்து தம்பதிகள் பலர் விவாகரத்து கேட்டு குடும்பநல நீதிமன்றத்தை நாடுவது உலகம் முழுவதும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஆனால் ஈராக்கில் நடந்த விவாகரத்து சம்பவம் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணம் நடந்த நாளன்றே விவகாரத்து கேட்டு மணமகன் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். காரணமாக மணமகள் பாடல் ஒன்றுக்கு மணமேடையில் ஆடியதாக கூறப்படுகிறது.

கல்ஃப் செய்திகளில் வந்த விவரங்கள்படி, ஈராக் தலைநகரான பாக்தாத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடந்த அன்று உறவினர்கள் முன்னிலையில் சிரியன் பாடல் ஒன்றுக்கு மணமகள் நடனமாடியிருக்கிறார்.

Mesaytara என்ற பிரபல பாடலில் உள்ள வரிகளே விவாகரத்துக்கு காரணமாக அமைந்திருக்கிறது. அந்த பாடலில் “I am dominant; you will be governed by my strict instructions”. “You are my lump of sugar; As long as you are with me, you will walk under my command; I am arrogant, I am arrogant,” என ஆங்கிலத்தில் பொருள்படுகிறது.

மனைவி தன்னை கட்டுப்படுத்துவது போல பாடல் வரிகள் இருப்பதால் மாப்பிள்ளை வீட்டாரை இது அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இதன் காரணமாகவே விவாகரத்து நடைபெற்றிருக்கிறது. இதற்கு முன்பாக இதேப்போன்று சம்பவம் மத்திய கிழக்கு நாடுகளில் பல நடந்துள்ளதாகவும் கல்ஃப் செய்தி தளங்கள் தெரிவிக்கின்றன.

Also Read: சேர்ந்து வாழாததற்கு இப்படியும் ஒரு காரணமா? 11 ஆண்டுகள் கழித்து மனைவி கூறிய காரணம்; ஆடிப்போன நீதிபதி!