Viral
ஆட்டுக்கு பிறந்த அதிசய குழந்தை... சிறிது நேரத்தில் காத்திருந்த அதிர்ச்சி.. அசாமில் விநோத நிகழ்வு!
அதிசயங்களும் அபூர்வங்களும் நிறைந்த உலகில் இது ஒன்றும் ஆச்சர்யமல்ல என்பது போல் அசாம் மாநிலத்தில் ஒரு வியப்பூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அசாம் மாநிலம் சாச்சர் மாவட்டம், கங்கர் பகுதியில் ஆடு ஒன்று சமீபத்தில் குட்டி ஈன்றுள்ளது. புதிதாகப் பிறந்த ஆட்டுக்குட்டி வழக்கமான ஆட்டின் உருவத்தில் இல்லாமல், மனித உருவமைப்பில் பிறந்துள்ளது. இதனால் ஆட்டின் உரிமையாளர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,“ஆடு சினையாக இருந்தபோது வழக்கமாக ஆடுகள் குட்டி போடுவது போல தான் குட்டி போடும் என நினைத்தோம். ஆனால் கடந்த திங்கட்கிழமை ஆடு குட்டி போடும்போது அது முழுமையாக வளராத மனிதக் குழந்தை போல இருந்தது.
வழக்கமாக ஆட்டிற்கு இருக்கும் வால் இல்லை. உடல் முழுவதும் மனித குழந்தையின் உடல் போலவே இருந்தது. மேலும் அதன் காது மற்றும் கால்கள் மட்டும் வித்தியாசமாக இருந்தன. அதிசய பிறவி என்று நினைத்தோம். ஆனால் பிறந்த சில நிமிடங்களில் இறந்துவிட்டது.” என ஆட்டின் உரிமையாளர் கண் கலங்கியவாறு கூறினார்.
இந்நிலையில் ஆடு, மனித உருவில் குட்டி போட்ட செய்தி சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறதது. கடந்த மாதம் பிரேசில் நாட்டில் 12 செ.மீ வாலுடன் பிறந்த குழந்தை புகைப்படம் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.
- உதயா
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!