Viral
#தக்காளி_இல்லாமல் : கண்ணைக் கட்டும் தக்காளி விலையேற்றம் - Googleஐ கேள்வி கேட்கும் மக்கள்!
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு விற்கப்படுகிறது. மேலும் மழை காரணமாக வெளி மாநிலத்திலிருந்தும், வெளி ஊர்களிலிருந்தும் தக்காளியை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. இதனால் தக்காளியின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் சமையலுக்கு மிகவும் தேவையான ஒன்றாகத் தக்காளி உள்ளது. தக்காளி இல்லாமல் ரசம் கூட இங்கு வைப்பது சிரமம். இதனால் விலை உயர்வு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து Google-லில் எது தேடினாலும் கிடைக்கும் என்பதால் 'தக்காளி இல்லாமல் எப்படி குழம்பு வைப்பது' என பலரும் தேடியுள்ளனர். Google தேடலில் தக்காளி இல்லாமல் சட்னி செய்வது எப்படி, தக்காளி இல்லாமல் ரசம் வைப்பது எப்படி, தக்காளி இல்லாமல் என்ன குழம்பு வக்கலாம், தக்காளி இல்லாமல் சாம்பார் செய்வது எப்படி என பல விதங்களிலும் மக்கள் தேடிபார்த்துள்ளனர்.
மேலும் Google-லில் 'தக்காளி இல்லாமல்' என்று தேடினாலே தக்காளி இல்லாமல் குழப்பு எப்படி வைப்பது என்பது குறித்த நீண்ட பட்டியலையே நமக்கு Google காட்டுகிறது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல், தக்காளி விலை உயர்வு குறித்தான பல மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!