Viral

“கம்யூட்டரில் வீடியோ கேம் விளையாடும் குரங்கு” - தொழில்நுட்பத்தில்  கலக்கும் உலக பணக்காரர் !

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது நியூராலிங்க் என்னும் ஸ்டார்ட்அப் நிறுவனம். மனித மற்றும் விலங்குகளின் மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் தொழில்நுட்பத்தை, இந்நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்த நிறுவனத்தினை உலகத்தின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க் நிர்வகித்து வருகிறார்.

இந்த நிறுவனம் தற்போது குரங்கு ஒன்றின் மண்டையோட்டில் சிறு ஒயர்களை கொண்ட சிப் போன்ற ஒயர்லெஸ் கருவியை பொருத்தி ஆய்வு மேற்கொண்டு வருவதாக ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். தற்போது இந்த சிப் பொருத்தப்பட்ட குரங்கு ஒன்றைக் கொண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

“ஒரு குரங்கின் மண்டை ஓட்டுக்குள் வொயர்லெஸ் சிப் ஒன்றை பொருத்தி உள்ளோம். இதன் மூலம் குரங்கு மூளைக்குள்ளே வீடியோ கேம் விளையாடுகிறது. அந்த கருவி எங்கே பொருத்தப்பட்டுள்ளது என்பதை யாராலும் கண்டறிய முடியாது. அந்த குரங்கு ஒரு சந்தோஷமான குரங்கு. அதுமட்டுமல்லாது அந்த குரங்கு மைண்ட் PONG விளையாட்டும் அடுத்தவர்களுடன் விளையாடி வருகிறது.

மூளை மற்றும் முதுகெலும்பு காயங்கள் போன்ற நிலைமைகளை குணப்படுத்த இந்த தொழில்நுட்பம் உதவும். FITBIT போல இந்த சிப்பை அவரவர் மண்டையோட்டில் பொருத்தி மூளைக்கு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளலாம்” என்கிறார் அவர்.

Also Read: #LIVE #TNASSEMBLY | சட்டப்பேரவை கூட்டத்திலிருந்து தி.மு.க வெளிநடப்பு!