Viral
மருத்துவரை வழியனுப்பி வைத்த கொரோனா நோயாளிகள்.. கேரளாவில் நெகிழ்ச்சி (VIDEO)
இந்தியாவில் முதல் முதலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது கேரள மாநிலத்தில்தான். நிபா போன்ற பல்வேறு வைரஸ் தொற்று மற்றும் பேரிடர்களை சந்தித்து வரும் காரணத்தால் முழித்துக்கொண்ட கேரள அரசு போர்க்கால அடிப்படையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தது.
அதன் பிறகு பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்த போது, எந்த சலனமும் இல்லாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தற்போது அங்கு பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கை அடைந்திருக்கிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் கேரளாவின் இந்த துரித நடவடிக்கைகள் நாட்டுக்கே முன்னுதாரணமாக உள்ளது. மேலும், ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு சேவையாற்றுவதிலும் கேரள அரசு தவறவில்லை.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக சேவையாற்றும் மருத்துவ பணியாளர்களின் பணி வெறும் வார்த்தைகளால் மதிப்பிட்டுவிட முடியாது. முகக்கவசங்கள், பாதுகாப்பு உடைகள் என அனைத்தையும் அணிந்துக்கொண்டு மிகவும் பொறுமையுடன் நோயாளிகளை கையாண்டு, குடும்பத்தினரை பிரிந்து இரவு பகல் பாராமல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு பணியாற்றும் மருத்துவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், பெருமைப்படுத்தும் வகையிலும், கேரளாவில் நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. அது என்னவெனில், காசர்கோடில் உள்ள கொரோனா மருத்துவமனை வார்டில் பணி முடிந்ததை அடுத்தும் வீட்டுக்குச் செல்லவிருக்கும் மருத்துவருக்கு கொரோனா நோயாளிகள் கைத்தட்டி, நடனம் ஆடி அவரை வழியனுப்பி வைத்துள்ளனர்.
பொதுவாக, குணமடைந்த நோயாளிகளுக்கு மருத்துவர்கள் ஒன்றிணைந்து இவ்வாறு வழியனுப்பி வைப்பர். மாறாக மருத்துவரை நோயாளிகள் வழியனுப்பி வைத்துள்ளது கண்கலங்க வைக்கும் செயலாகவே இருந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
Also Read
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!