Viral
Google TOP 10 தேடுதல்கள் : இந்தியர்கள் எதையெல்லாம் 2019ல் அதிகம் தேடி இருக்கிறார்கள் தெரியுமா ?
2019 ஆம் ஆண்டில் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய சொற்கள் என்னென்ன என்பதை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியர்கள் இந்தாண்டில் கிரிக்கெட் உலகக்கோப்பை குறித்து தான் அதிகம் தேடியுள்ளனர்.
கிரிக்கெட் உலககோப்பை!
கடந்த ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் உலககோப்பை வரை நடைப்பெற்றது. இங்கிலாந்து அணி உலககோப்பையை கைப்பற்றியது. அரையிறுதி போட்டியில் இந்தியா நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது.
மக்களைவைத் தேர்தல்!
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 6 கட்டங்களாக ஏப்ரல் முதல் மே வரை நடைபெற்றது. இதில் பா.ஜ.க வெற்றிப்பெற்று மீண்டும் மோடி பிரதமராக பதவியேற்றார். தேர்தலின் போது எவ்வாறு வாக்களிப்பது, எவ்வாறு பெயர்த்திருத்தம் மேற்கொள்வது குறித்தும் தேடியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
சந்திரயான் 2
நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய, சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், ஜூலை மாதம் விண்ணில் ஏவபட்டது.
எதிர்பாராத விதமாக விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோவுக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இருப்பினும் ஆர்பிட்டர் உதவியுடன் ஆய்வு தொடரும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
கபீர் சிங்
தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படம் அர்ஜுன் ரெட்டி. இப்படம் இந்தியில் கபீர் சிங் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் ஷாஹித் கபூர், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
அவெஞ்செர்ஸ் எண்ட்கேம்
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் கடந்த ஏப்ரல் 26ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் உலகளவில் வசூல் சாதனை புரிந்தது.
ஆர்ட்டிகில் 370
கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் பிரிவான 370 - ஐ மத்திய பா.ஜ.க அரசு நீக்கியது.
நீட் தேர்வு முடிவுகள்
அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு முடிவு கடந்த ஜுன் மாதம் 5ம் தேதி வெளியாகியது.
ஜோக்கர்
மற்றொரு ஹாலிவுட் திரைப்படம் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது. DC காமிக்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ஜோக்கர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பல்வேறு சாதனைகளை படைத்தது.
கேப்டன் மார்வெல்
மார்வெல் ஸ்டுடியோஸ் சார்பில் கேப்டன் மார்வெல் என்ற பெண் சூப்பர் ஹீரோ திரைப்படம், கடந்த மார்ச் மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது. இது மார்வெலின் முதல் முழுநீளப் பெண் சூப்பர்ஹீரோ திரைப்படம். இந்தப்படம், பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பியது.
பி.எம் கிசான் யோஜனா
பிரதம மந்திரியின் கிசான் யோஜனா என்ற திட்டம் நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவி தொகையாக வழங்கப்படும்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!