Viral
சோனியாகாந்தி பிறந்தநாள்: தொண்டர்களுக்கு புதுச்சேரி முதல்வர் கொடுத்த ஆச்சர்ய பரிசு? கண்ணீரில் தொண்டர்கள் !
காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தியின் பிறந்தநாளை புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி இன்று காலை சிறப்பாக கொண்டாடியது. மணக்குள விநாயகர் கோயிலில் முதல்வர் நாராயணசாமி தலைமையில், மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆ.நமச்சிவாயம் முன்னிலையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் தங்கத்தேர் இழுத்தனர்.
இதனைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் முதல்வர் நாராயணசாமி கேக் வெட்டினார். இந்த கேக்கினை கட்சி நிர்வாகிகளுக்கு ஊட்டினார். அமைச்சர்கள், முதல்வர் நாராயணசாமிக்கு கேக் ஊட்டினர். பின்னர், கட்சித் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து, கட்சியின் மகளிர் அணியினருக்கு முதல்வர் நாராயணசாமி இன்ப அதிர்ச்சி தரும் வகையில் பரிசு ஒன்றினை வழங்கினார். இந்த பரிசை கண்டவுடன் மகளிர் அணியினர் கண் கலங்கினர். அந்த பரிசு வேறொன்றும் இல்லை. வெங்காய பாக்கெட்டுகள்தான். தலா ஒரு கிலோ வெங்காய பாக்கெட்டுகள் மகளிர் அணியினருக்கு பரிசாக வழங்கப்பட்டது.
வெங்காய விலை விண்ணைத் தொட்டும் இந்த தருணத்தில், சோனியாகாந்தி பிறந்தநாளை முன்னிட்டு, வெங்காய பரிசு வழங்கிய முதல்வர் நாராயணசாமியை மகளிர் அணியினர் மகிழ்ச்சியுடன் வாழ்த்தினர்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!