Viral
சிங்கம் பட பாணியில் ரவுடிகளை எச்சரித்து அனுப்பிய போலிஸ்!
கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்காண இடைத்தேர்தல் டிசம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் விதமாக காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.
இடைத்தேர்தல் நடைபெற உள்ள கே.ஆர்.புரம் தொகுதி பெங்களூர் காவல்துறையின் கிழக்கு மண்டல கட்டுப்பாட்டில் வருகிறது.
இதனையடுத்து, கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா, இந்த மண்டலத்தில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகளுக்கு சம்மன் அனுப்பி அவர்களை நேரில் வர வைத்துள்ளார்.
அப்போது இடைத்தேர்தல் குறித்தும், இடைத்தேர்தலை முன்னிட்டு எந்த ஒரு சட்ட விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு ஈடுபட்டால் கடும் நடவடிக்கை பாயும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல பெங்களூரு வடக்கு மண்டலத்திலும், ரவுடிகளின் கூட்டத்தை நடத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளனர்.
மேலும், மேலும் கே.ஆர்.புரம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரவுடி பட்டியலில் உள்ளோரின் வீடுகளுக்கு காவல்துறையினர் சென்று அங்கு ஆயுதங்கள் ஏதேனும் ஒளித்து வைத்துள்ளனரா என்பது தொடர்பாக சோதனை நடத்தினர்.
சிங்கம் திரைப்படத்தில் ரவுடிகளை அழைத்து மிரட்டுவது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். தற்போது பெங்களூரில் அதேபோன்ற சம்பவம் நிஜத்தில் நடந்துள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!