Viral
“கேரள முதல்வர் பினராயி விஜயனாக நடிக்கிறார் மம்மூட்டி”- இணையத்தில் வைரலாகும் போஸ்டர்!
மலையாள திரையுலகின் ‘மெகாஸ்டார்’ மம்மூட்டி, தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னட, ஹிந்தி சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர். இவரை ரசிகர்கள் செல்லமாக ‘மம்மூகா’ என்று அழைக்கிறார்கள்.
இவர் சமீபத்தில் மலையாளத்தில் நடித்த ‘18 படி’ என்ற சினிமாவரை இவர் தோன்றும் முதல் காட்சியில் ரசிகர்கள் விசில் சத்தம் விண்ணைப் பிளக்கும்.
சாஜின் என்ற பெயரில் மலையாள திரையுலகில் அறிமுகமான மம்மூட்டி. சில படங்களுக்கு பிறகு மம்முட்டி என்று பெயரை மாற்றிக்கொண்டார். அவர் நடித்த ‘நியூ டெல்லி’ படம் மாபெரும் வெற்றியடைந்தது, மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த அந்தப் படத்திற்காக தேசிய விருதையும் வென்றார்.
தமிழில் முதன் முதலில் ‘மெளனம் சம்மதம்’ படத்தில் அறிமுகமான மம்முட்டி தமிழ் மக்களின் மனதை கொள்ளை கொண்டார். இதன் தொடர்ச்சியாக கே.பாலச்சந்தர் இயக்கத்தில் அழகன் படத்தில் நடித்த மம்முட்டி, சேரனின் ‘மறுமலர்ச்சி’ மூலமாக தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் நுழைந்தார்.
ஆர்.கே.செல்வமணியின் ‘மக்களாட்சி’ என்ற அரசியல் படமும், ரஜினியுடன் மம்மூட்டி இணைந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘தளபதி’ திரைப்படமும் மம்முட்டியின் இமேஜை தமிழ் ரசிகர்களிடம் உயர்த்தியது.
சமீபத்தில் தெலுங்கில் வெளியான ’யாத்ரா’ படத்தில், முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியாக நடித்திருந்தார் மம்மூட்டி. இவரது நடிப்பு ஒய்.எஸ்.ஆரை தத்துரூபமாக கொண்டு அமைந்திருந்தாக ரசிகர்கள் கொண்டாடினர்.
இந்நிலையில் மலையாள அரசியலை மையப்படுத்தி உருவாகும் ‘ஒன்’ என்ற படத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயனாக நடிக்கிறார். ‘சிறகொடிஞ்ச கினாவுகள்’ படத்தை இயக்கிய சந்தோஷ் விஸ்வநாத் இந்தப்படத்தை இயக்குகிறார்.
இதற்காக மரியாதை நிமித்தமாக பினராயி விஜயனை நேரில் சந்தித்திருக்கிறார் மம்மூட்டி. மம்மூட்டி தன்னை வந்து சந்தித்த விஷயத்தை, கேரள முதல்வரும் ட்விட்டரில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இதனிடையே, பினராயி விஜயனாக மம்முட்டி நடிக்கும் படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. அதில் பினராயி விஜயன் போன்ற மேக்-அப்பில், கம்யூனிஸ்ட் கொடிகள் கொண்ட பின்புலத்தில், மம்மூட்டி சிரிப்பது போன்று இடம் பெற்றுள்ளது. மேலும், ‘மிரட்டலும், பேரம் பேசுவதும் எங்களிடம் நடக்காது’ என்ற வாசகமும், ‘பினராயிலே சகாவ் பேரு விஜயன்’ என்ற தலைப்பு வாசகமும் இடம்பெற்றுள்ளது.
தற்போதுள்ள அரசியல் சூழலில் பினராய் விஜயன் வாழ்க்கை குறித்த திரைப்படம் மம்மூட்டி நடிப்பில் உருவாவது கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நாளை நடைபெறவுள்ள “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் ? சென்னையில் எங்கு ? விவரம் உள்ளே !
-
திமுக முப்பெரும் விழா... கரூர் அழைக்கிறது வாரீர் : உடன்பிறப்புகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
முதலமைச்சரின் துரித செயல்பட்டால் நேபாளத்தில் இருந்து 116 தமிழர்கள் மீட்பு... உதவி எண்கள் அறிவிப்பு !
-
இந்தியாவில் முடிவுக்கு வரும் தென்மேற்குப் பருவமழை... மழை அதிகமா ? குறைவா? விவரம் உள்ளே !
-
"ஒன்றிய அரசின் அறிவிப்பு கூட்டாட்சிக்கும், மக்களாட்சிக்கும் எதிரானது" - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் !