Viral
“செத்து செத்து விளையாடலாமா?” - பயணிகளை மெர்சலாக்கும் குதிரை! (வைரல் வீடியோ)
வீட்டுவேலை செய்யச் சொல்லும் போது, அதை மறுக்க சிறுவர்கள் செய்யும் உயாயம், ‘கால் வலிக்கிறது’ என்பதுதான். இதைப்போன்று மனிதர்கள் தூங்குவதுபோல் நடிப்பது, காட்டு கத்தாக கத்தினாலும் காது கேட்காதது போன்று நடிப்பது என மனிதர்கள் தங்கள் இயல்பை பல்வேறு சமயங்களில் காட்டி வேலையை தட்டிக் கழிப்பார்கள்.
இதுபோன்று ஒரு குதிரை சவாரி செய்ய விரும்பாமல் தன் மீது அமரும் சுற்றுலா பயணிகளை கீழே இறக்க, மயங்கி விழுந்து கிடப்பதுபோன்று நடிக்கிறது. இதைக்கண்டு சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி அடைவதுடன், குதிரையை எழுப்ப மனமில்லாமல் குதிரை சவாரி செய்யாமலேயே செல்கின்றனர்.
மனிதர்கள் பக்கத்தில் இல்லாத நேரத்தில் தலையை தூக்கி பார்ப்பதும், யாராவது அருகில் வந்தால் மயங்கி விழுந்து நடிப்பதும் இந்த குதிரையின் அபார நடிப்புத் திறனை படம்பிடித்துக் காட்டுகிறது.
இப்படியாக, செத்து செத்து விளையாடும் இந்த குதிரையின் சேட்டை வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது.
Also Read
-
பரந்தூர் விமான நிலையம் : மாற்று இடம் கேட்காத தமிழ்நாடு அரசு - தி.மு.க MP கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்!
-
முதியவரைக் காரில் கடத்தித் தாக்கிய த.வெ.க நிர்வாகி : வீடியோ வெளியாகிப் பெரும் கொந்தளிப்பு!
-
குதிரை பேரம் - சண்முகத்துக்கு சந்தேகம் இருந்தால் வைகோவிடம் கேட்டுக் கொள்ளட்டும் : முரசொலி!
-
“திமுக-வை வழக்குகளால் அழிக்க முடியாது.. எத்தனை பேரை சிறைவைக்க முடியும்” - ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்!
-
FIFA 2026: மிரட்டல் ஆட்டத்தால் கோப்பையை முத்தமிட்ட ஸ்பெயின்.. சொதப்பிய அர்ஜென்டினா.. எங்கு தடுமாறியது!