Viral

மழை அதிகம் பெய்ததால் திருமணம் செய்து வைக்கப்பட்ட தவளைகளுக்கு விவாகரத்து : ம.பி.யில் வினோதம்!

மழை வேண்டி கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் செய்து வைப்பது, காக்காவிற்குத் திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் இந்தியாவில் ஆங்காங்கே அவ்வப்போது நடைபெறுவது வாடிக்கையான ஒன்று.

அவ்வரிசையில் தவளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது தற்போது இணைந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மழைவேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் வரலாறு காணாத மலை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு வழக்கமானதை விட 26 சதவிகிதம் அதிக மழை பெய்துள்ளது. இந்த மழைக்கு தவளைகளின் திருமணமே காரணம் என திருமணத்தை நடத்தி வைத்த இந்திரபுரி என்ற பகுதியில் உள்ள ஓம் ஷிவ் சேவா ஷக்தி மண்டல் அமைப்பு எண்ணியுள்ளது.

இதனால் அந்த அமைப்பு தாங்கள் திருமணம் செய்து வைத்த தவளைகளுக்கு விவாகரத்து சடங்கு செய்துள்ளனர். திருமணம் செய்து வைக்கப்பட்ட தவளைகள் கிடைக்காததால் பொம்மை தவளைகளை வைத்து விவாகரத்து செய்துள்ளனர். தவளைகளுக்கு விவாகரத்து செய்ததன் மூலம் மழை குறைந்து வெள்ள பாதிப்புகளில் இருந்து தப்பலாம் என அவர்கள் நம்புகின்றனர்.