Viral
சாதி மாறி காதலித்த இளம் பெண்ணை அரை நிர்வாணமாக்கி அடித்த குடும்பத்தினர்!
மத்திய பிரதேச மாநிலம் தெமாச்சி கிராமத்தில் வசிக்கும் பிலாலா என்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 19 வயது பெண், பீல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளன. இதனால் காதலர்கள் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதனை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் பகுதி கிராம மக்கள் அந்த பெண்ணை அரை நிர்வாண கோலத்தில் அடித்து இழுத்துச் சென்றனர். மேலும் அழுது கொண்டே அந்த இளம்பெண் விட்டுவிடும் படி கெஞ்சுவதையும் பொருட்படுத்தாமல், கிராமத்து இளைஞர்கள் அடித்து விரட்டும் வீடியோ சமூக வலைதளங்ககளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால் இதுகுறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்யவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து விளக்கம் அளித்துள்ள அலிராஜ்பூர் காவல் கண்காணிப்பாளர் விபுல் ஸ்ரீவத்சவா, இளம்பெண் அடித்து துன்புறுத்தப்பட்டது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை என்றும், வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!