Viral
“இது பைக்கா... இல்ல லோடு ஆட்டோவா?” - மொத்தக் குடும்பமும் இணைந்து ஒரு சாகசப் பயணம்! (Video)
இருசக்கர வாகனங்களில் அதிகபட்சம் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பது போக்குவரத்து விதி. இப்போது இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவருமே தலைக்கவசம் அணியவேண்டும் எனவும் மீறுவொருக்கு அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த விதிகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, ஒருவர் தனது பெரிய குடும்பத்தையே ஒரு இருசக்கர வாகனத்தில் வைத்து அழைத்துச் செல்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரே இருசக்கர வாகனத்தில் 7 மனிதர்கள், 3 நாய்கள், கோழி, பல பொருட்கள் என வண்டியின் எந்தவொரு பாகமும் வெளியே தெரியாதபடிக்கு முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறார்கள். சாலையில் சென்ற இன்னொரு இருசக்கர வாகனத்திலிருந்து இந்த சாகசப் பயணத்தை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஓட்டுபவர் மற்றும் அவரது மனைவியோடு, 5 குழந்தைகளும், பக்கவாட்டில் ஒரு நாய், வண்டியின் முன்புறம் ஒரு நாய், போதாக்குறைக்கு நடுவில் ஒரு நாய், பின்னால் கோழிகள் என ஒரு வீடே நகர்ந்து செல்வது போல அந்தக் காட்சி இருக்கிறது.
“இதெல்லாம் இந்தியாவில் மட்டுமே நடக்கும்” எனக் குறிப்பிட்டு ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்த இந்த வீடியோவை பலரும் பரப்பி வருகின்றனர். அதேநேரம், மிக ஆபத்தான பயணம் எனவும் பலர் கண்டித்துள்ளனர்.
Also Read
-
ரூ.3 ஆயிரத்துடன் கூடிய தமிழர் திருநாள் ‘பொங்கல்’ பரிசுத் தொகுப்பு! : திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!
-
“‘தான் திருடி, பிறரை நம்பார்’ என்பதைப் போன்றவர்தான் எடப்பாடி பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!