Viral
மொரட்டு சிங்கிள்களை மிங்கிளாக்க காதல் ரயில் விட்ட சீன அரசு - இந்தியாவுக்கும் இப்படி ஒரு ரயில் வருமா?
உலகம் முழுவதும் காதலர்கள், திருமணம் ஆனவர்களைவிட, திருமணமாகாத, காதலில் விழாத ஆண்களே அதிகமாக உள்ளனர். அப்படி, சீனாவில் சுமார் 200 மில்லியன் இளைஞர்கள் சிங்கிளாகவே உள்ளதாக கூறப்படுகிறது.
ஆகையால், தங்களுக்கான இணையர்களை இளைஞர்கள் தேர்ந்தெடுப்பதற்காக சீனாவின் கம்யூனிச இளைஞர் கழகமும், செங்க்டு ரயில்வேத்துறையும் இணைந்து y999 Love - Pursuit (காதல் கொள்ளும் ரயில்) என்ற ரயிலை தயாரித்திருந்தனர்.
10 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 1,000 ஆண்களும், 1,000 பெண்களும் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது, சீனாவின் மேற்கு சாங்கிங் ரயில் நிலையம் முதல் ஆமுர் வரை பயணித்தது. இந்த சிறப்பு ரயில் ஆண்டுக்கு 3 முறை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது வெறும் ரயில் பயணமாக மட்டும் இல்லாமல், ஆண்களும், பெண்களும் சேர்ந்து விளையாடும் வகையில் நிறைய விளையாட்டு அம்சங்களும், நிகழ்ச்சிகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் முன் பின் தெரியாத இருவர் அறிமுகமாக உதவியாக இருக்கும்.
இதேபோல், கடந்த ஆண்டு இயக்கப்பட்ட காதல் ரயிலில் 3000 பேர் பயணித்துள்ளனர். இதில் 10 ஜோடிகள் காதலித்து திருமணம் செய்துக்கொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் இப்படி ஒரு காதல் ரயில் தேவை. ஒன்றல்ல ஓராயிரம் இருந்தாலும் போதாது.
Also Read
-
“தமிழ்நாட்டின் இரயில்வே திட்டங்களுக்கான காலக்கெடு என்ன?” : நாடாளுமன்றத்தில் ஆ.இராசா எம்.பி கேள்வி!
-
“VB G RAM G மசோதா என்பது வளர்ச்சி பாரதம் இல்லை, விபரீத பாரதம்!”: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கண்டனம்!
-
“திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு மாபெரும் நற்சான்றுதான் 16% வளர்ச்சி!” : அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
2026 சட்டமன்றத் தேர்தல் : கனிமொழி MP தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு - தி.மு.க அறிவிப்பு!