Viral
மாட்டுக்கு ராக்கி கட்டி சகோதரி ஆக்கிவிட்டால், யாரும் கொல்லமாட்டார்கள்: பா.ஜ.க நிர்வாகியின் ‘அடடே’ யோசனை !
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்ட மேலவை உறுப்பினராக இருப்பவர் புக்கல் நவாப். இவர் கடந்தாண்டு சமாஜ்வாடி கட்சியில் இருந்து பா.ஜ.க-வில் இணைந்தார். இணைந்த நாளில் இருந்தே, தான் தீவிர பா.ஜ.க ஆதரவாளன் என காட்டிக்கொள்ள பல்வேறு சர்ச்சை பேச்சுகள் பேசி வருகிறார்.
மேலும், பா.ஜ.க தலைமையிடம் நற்பெயர் வாங்க “தான் ஒரு அனுமன் பக்தர்” என்று அறிவித்து, சட்ட மேலவை உறுப்பினர் பதவியை மறந்து கடந்த ஒருவருடமாக மாநிலம் முழுவதும் அனுமன் விழாக்களை நடத்தி வந்தார்.
அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு அனுமன், முஸ்லிம் என்றும் ரஹ்மான், புர்கான் போன்ற முஸ்லிம் பெயர்களின் உச்சரிப்பு அனுமன் பெயரிலும் இருப்பதால், உண்மையில் அனுமன் ஒரு முஸ்லிம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்துக்கு பா.ஜ.க தலைவர்களே எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி ரக்ஷா பந்தன் என்னும் சகோதரத்துவத்தை போற்றும் வகையில் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பசுமாட்டுக்கு ராக்கி கட்டுப்போவதாக அறிவித்தார் புக்கல் நவாப்.
மேலும் இதுகுறித்து அவர் பேசியதாவது, “சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆண்களுக்கு ராக்கி கட்டுவார்கள். அதேபோல் பசுவுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு அத்தனை புனிதமானது. எனவே இந்த நாளில் பசுக்களுக்கு ராக்கி கட்ட இருக்கிறேன்.
இதற்காக லக்னோவில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில், பசுக்களை கொல்லக்கூடாது வழிபட வேண்டும் என்பதை அனைவருக்கும் உணர்த்துவேன்" என தெரிவித்துள்ளார். ஆனால், அறிவித்ததைப் போல இன்று விழா நடக்கவில்லை. இது குறித்து எந்தத் தகவலும் வெளியாகிவில்லை.
Also Read
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!