Viral
‘ஓய்வூதிய விவகாரம்’- 107 வயது முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் உருக்கம்!
புதுச்சேரி காவல்துறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆரோக்கியசாமி (வயது 107). நெல்லித்தோப்பில் உள்ள அருள்படையாச்சி வீதியில் வசித்து வரும் இவர், பிரெஞ்சு ஆட்சி காலத்தில் இருந்தே புதுவை காவல்துறையில் சேர்ந்து பணியாற்றிய கடந்த 1965ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்திற்கு புதிய டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றுள்ள பாலாஜி ஸ்ரீ வஸ்தவா, 107 வயதான ஆரோக்கியசாமி வீட்டிற்கு சென்றார். அங்கு அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். பின்னர் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.
அப்போது ஆரோக்கியசாமி அவரிடம், புதுச்சேரி காவல்துறையில் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், ஓய்வூதியம் பெறும் காவலர்களுக்கு இன்னும் 6-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் கூட அமல்படுத்தப்படவில்லை, அதனை அமல்படுத்த உதவும்படி கோரிக்கை விடுத்தார்.
இதனைக் கேட்டுக்கொண்ட போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீ வஸ்தவா, அவரிடம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு பரிந்துரை செய்வதாக உறுதி அளித்தார். 107 வயதான போதும், போலீஸ் நலனுக்காக ஆரோக்கியசாமி கோரிக்கை விடுத்தது போலீஸ் டி.ஜி.பி.,யையும், அதிகாரிகளையும் நெகிழ வைத்துள்ளது.
Also Read
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
TNPSC Group 1 : 89 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“சென்னை இதழியல் நிறுவனம்!” : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!