Viral
பேக் வீலிங் சாகசத்தால் இளைஞருக்கு நேர்ந்த சோகம் - விபரீதத்தில் முடிந்த டிக் டாக் ஆசை!
டிக் டாக் செயலில் வீடியோ பதிவிடுவதன் மூலம் சிலர் பிரபலமாகிறார்கள். பலர் அதனால் பாதிப்பிற்குள்ளாகிறார்கள். சாகசம் என்ற பெயரில் என்ன ஏது என்று நிலை தெரியாமல் பிரபலமடைவதற்காக பல வகையில் மெனக்கெட்டு வருகின்றனர்.
அது போல், டிக்டாக்கில் பதிவேற்றுவதற்காக மும்பையில் முர்பாத் என்ற பகுதியில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட முயற்சி விபரீதத்தில் முடிந்தது. அதில், வேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் ஒருவர் பேக் வீலிங் செய்ய முயற்சித்துள்ளார்.
அப்போது தலைக்குப்புற பைக் விழுந்ததில் படுகாயம் அடைந்ததை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் ,கடந்த மாதம் கர்நாடக மாநிலத்தில் கச்சேரி பாடும் இளைஞர் ஒருவர் பல்டி அடிப்பது போன்று டிக் டாக் வீடியோ எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது நிலைதடுமாறியதில் கழுத்து உடையும்படி கீழே விழுந்தார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபின் அந்த இளைஞருக்கு தண்டுவடம் உடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.
இந்த வீடியோக்கள் இணையத்தில் தற்போது பகிரப்பட்டு வருகிறது. இளைஞர்கள் மத்தியில் சமூக வலைதளங்கள் மீதுள்ள மோகத்தின் காரணமாக இது போன்ற விபரீதங்கள் ஏற்பட்டு வருகின்றன என்றும் பொழுது போக்குக்காக பயன்படுத்துவது மட்டுமல்லாமல் தற்போது வாழ்வின் அங்கமாக டிக் டாக் போன்ற செயலிகள் இருப்பது வேதனையை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Also Read
-
சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - காரணம் என்ன ?
-
தமிழ்நாட்டுக்கு பாராமுகம் காட்டினால்,தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- தினகரன் தலையங்கம் எச்சரிக்கை!
-
முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!