Viral
கணவன் தலையில் கிரைண்டர் கல்லைப் போட்டு கொலை செய்த மனைவி : திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தைச் சேர்ந்தவர் வேலு. இவர் கட்டட வேலை செய்து வருகிறார். அவரது மனைவி ஞானம்மாள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வேலு தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார்.
வீட்டில் தகராறு ஏற்படும்போதெல்லாம் ஞானம்மாளை அடித்து துன்புறுத்தியுள்ளார் வேலு. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவும் வேலு குடித்து வந்ததால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோல வேலு சண்டைபோடுவதால் ஆத்திரமடைந்த ஞானம்மாள், அதிகாலை சமையலறையில் இருந்த கிரைண்டர் கல்லை எடுத்து தூங்கிக்கொண்டிருந்த வேலுவின் தலையில் போட்டுக் கொன்றுள்ளார்.
அப்போது அவரது மகனும், மகளும் வெளியே வந்துள்ளனர். இறந்து கிடந்த வேலுவைப் பார்த்து இருவரும் கதறி அழுதுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வேலுவின் வீட்டிற்கு வந்து இறந்துகிடந்த வேலுவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் தகவலறிந்த போலீசார், வேலுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்கு பதிவுசெய்து ஞானம்மாளை கைது செய்து , நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Also Read
-
மோசமான தேசிய நெடுஞ்சாலைகளால் அதிகரிக்கும் விபத்துகள் : நாடாளுமன்றத்தில் திமுக MP-க்கள் குற்றச்சாட்டு!
-
கலவரம் செய்ய துடிக்கும் கயவர்களுக்குத் துணை போவது வெட்கக்கேடு : பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்