Viral
தோழியுடன் சேர்ந்து கணவரை துப்பட்டாவால் நெரித்துக் கொன்ற மனைவி: கொலை குறித்து அதிர்ச்சி தகவல்!
சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் அப்பகுதில் ஆட்டோ டிரைவராக பணியாற்றிவருகிறார். அவருக்கும் காயத்ரி என்பவருக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர்.
நாகராஜ், தன் மனைவி காயத்ரியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்றும் வழக்கம்போல இருவருக்குமிடையே சண்டை எற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த காயத்ரி, கணவர் நாகராஜ் உறங்கும்போது, தனது தோழி பானுவுடன் சேர்ந்து தலையணையை வைத்து முகத்தில் அழுத்தியும், துப்பாட்டாவை வைத்து கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார்.
பின்னர் எதுவும் தெரியாதது போல, பானு அவரது வீட்டுக்குச் சென்றுவிட்டார். காயத்ரியும், அதிகாலை 4 மணியளவில், குழந்தைகளை தனது அக்கா வீட்டில் விட்டுவிட்டு, தம்பி வினோத்தின் ஆட்டோவில் வானகரத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு புறப்பட்டார்.
காலையில் மர்மான முறையில் நாகராஜ் இறந்து கிடந்ததையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கொலையில் ஈடுபட்ட காயத்ரி மற்றும் பானு இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். தன் மீது சந்தேகப்பட்டதற்காக கொலை செய்ததாக போலீஸ் விசாரணையின்போது காயத்ரி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? : ஏன் எற்றப்படுகிறது- எதை உணர்த்துகிறது!
-
சென்னையின் 22 சுரங்கப்பாதைகளிலும் நீர் தேக்கம் இல்லை! : சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்ன?
-
விஜய் அனுப்பிய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்!