Viral
முடிவுக்கு முன்னரே எம்.பி ஆன ஓ.பி.எஸ் மகன் : எல்லை மீறும் அ.தி.மு.க தேர்தல் விதிமீறல்
தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரின் பெயர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அமைந்துள்ள சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி இங்கு அமைக்கப்பட்ட கல்வெட்டில், கோவிலுக்கு உபயம் அளித்தவர்கள் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
அதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இதில் யாரும் எதிர்பாராத விதமாக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் என்று பொறிக்கப்பட்டிருந்தது.
இது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இன்னும் வாக்கு எண்ணிக்கையே நடைபெறாத நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமாரை எப்படி தேனி எம்.பி. என கல்வெட்டில் எழுதலாம் என எதிர்கட்சியினர் கேள்விகளை எழுப்பியுள்ளனர். மேலும் அப்பகுதி மக்கள் பெயரை நீக்கவும் வலியுறுத்தினார். இதனிடையே செய்தி ஊடகத்தின் வழியே பரவியதை அடுத்து எம்.பி ரவீந்திரநாத்குமார் என வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில் பெயர் மறைக்கப்பட்டுள்ளது.
எந்த நம்பிக்கையில் முடிவு வரும் முன் நாடாளுமன்ற உறுப்பினர் என பெயரில் இணைத்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்கள் புறக்கணிப்பார்கள் என்று அறிந்து வாரணாசி சென்று மோடியின் காலில் தந்தையும் மகனும் விழுந்த நம்பிக்கையா அல்லது சர்ச்சைக்குள்ளான வகையில் வேறு ஒரு இடத்தில் இருந்து வாக்குப் பெட்டி தேனிக்கு கொண்டு வரப்பட்ட நம்பிக்கையா என்பதை ஓ.பி.எஸ் குடும்பம் தான் விளக்க வேண்டும்.
Also Read
-
“தகுதியான மகளிருக்கு டிச.15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்!” : துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
“இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்!” : இலங்கை பிரதமரின் இந்திய வருகையையொட்டி முதல்வர் கடிதம்!
-
“WhatsApp வதந்திகளை மட்டும் நம்பி உயிர் வாழும் பழனிசாமி” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
"கருத்து தெரிவிக்கும் அதிகாரம் கூட ஆளுநருக்கு கிடையாது" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் தீர்மானம் !
-
ராணுவ அதிகாரி மீதான விமர்சனம்... பாஜக அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம் !