Viral
எலிகளால் வாக்கு பதிவு இயந்திரங்களுக்கு ஆபத்து - வேட்பாளர் புகார் !
உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பா.ஜனதா சார்பில் நடிகை ஹேமமாலினிக்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சமாஜ்வாடி கூட்டணி சார்பில் ராஷ்டிரீய லோக்தளம் வேட்பாளர் நரேந்திர சிங் போட்டியிடுகிறார்.ஏப்ரல் மாதம் 18-ந் தேதியே அங்கு வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள், மதுராவில் மண்டி சமிதி பகுதியில் உள்ள பாதுகாப்பு பெட்டக அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எலிகளால் ஆபத்து என்று நரேந்திர சிங் பீதியை கிளப்பி உள்ளார். எனவே, அறையை சுற்றிலும் கம்பி வலை வேலி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து, அந்த அறையை நேற்று மாவட்ட கலெக்டர் சர்வக்ய ராம் மிஸ்ரா பார்வையிட்டார். பிறகு அவர் கூறுகையில், “எலிகளால் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எந்த ஆபத்தும் கிடையாது. வெளியாட்களை அனுமதிக்கக்கூடாது என்று மத்திய பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
Also Read
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!