Videos

‘இறந்து போன மனைவியை பார்த்ததும் கலங்கிய கணவர்’ - மனதை உருக்கும் நெகிழ்ச்சி வீடியோ!

தென்கொரியாவில் Kim Jung Soo எனும் 57 வயதானவர் வசித்து வருகிறார். இவரது மனைவி இறந்துவிட்டார். ஆனால் தற்போது தொழில்நுட்ப வசதியுடன் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையின் மூலம் இறந்து போன தன் மனைவியை சந்தித்துள்ளார் Kim Jung Soo.

தென்கொரியாவின் MBC எனும் சேனல் ஆவணப்படங்களை தமது தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் நமக்கு பிரியமானவர்கள் இறந்திருந்தால் அவர்களை விர்ச்சுவல் ரியாலிட்டி மூலமாக மீண்டும் சந்திக்க வழிவகை செய்யப்படுகிறது. இந்நிலையில்தான் நீண்ட நாட்களாக நோயினால் பாதிக்கப்பட்டு உயிர் பிரிந்த தன் மனைவியை MBC சேனல் துணையுடன் Kim Jung Soo சந்தித்துள்ளார்.

தன் மனைவியை Kim Jung Soo சந்திக்கும்போது அவரது கண்களில் கண்ணீர் பெருகியுள்ளது. உருக்கமான அந்த நிகழ்வு அந்த ஆவணப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த எல்லோர் மனதையும் கலங்கச் செய்துள்ளது. இந்த ஆவணப்படத்தை தயாரிக்க MBC சேனலுக்கு ஆறு மாத காலம் தேவைப்பட்டதாக படக்குழு கூறுகிறது. விர்ச்சுவல் ரியாலிட்டி மூலமாக Kim Jung Soo தனது மனைவியுடன் நடனமும் ஆடியுள்ளார்.

ஏற்கனவே Jang Ji-sung எனும் தாய், hemochromatosis எனும் நோயால் இறந்துபோன தமது 7 வயதேயான Nayeon எனும் மகளை இதே முறையில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: “சென்னையில் அரசுப் பேருந்து கடத்தல்” - ஊழியர்கள் அதிர்ச்சி!