Tamilnadu

மக்களே உஷார்... கோவையில் அடுத்தடுத்து உயிரிழந்த நாரைகள்... ஆய்வில் அதிர்ச்சி!

கோவை, சித்தாபுதூர் பி.கே.ஆர்.நகரில் ஓடைக்கு அருகே 14 குளத்து நாரைகள் கடந்த 18 ம் தேதி உயிரிழந்த நிலையில் கிடந்தது. அந்த உயிரிழந்த நாரைகள் குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அதன் உடல்களை சேகரித்து, முழுப் பறவை மாதிரிகளையும் பறவைக் காய்ச்சல் பரிசோதனைக்காக போபாலில் உள்ள ICAR-NIHSAD-க்கு நேரடியாக அனுப்பினர்.

இதைத்தொடர்ந்து பறவை காய்ச்சல் தொற்று காரணமாக அது உயிரிழந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து கோவை மாநகராட்சி சார்பில் பாதிக்கப்பட்ட பகுதியில் தேவையான உயிரியல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதனிடையே மேலும் உயிரிழந்த நாரைகள் இருந்த இடத்தை சுற்றி 1 கி.மீ. தொலைவிற்கு எந்தக் கோழிப் பண்ணையும் இல்லை என்பதும், எந்தக் கோழி இறப்பும் பதிவு செய்யப்படவில்லை. எனினும் கோவை மாவட்டத்தில் உள்ள பிராய்லர் கோழிப் பண்ணையாளர்களுக்கு சங்கங்கள் மூலம் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சந்தேகத்திற்கிடமான வகையில் கோழிகள் உயிரிழப்பு இருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கும்படி கோழிப் பண்ணையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. மேலும் கோவை மாவட்டத்தை அடுத்த தமிழக கேரளா எல்லையில் உள்ள 12 சோதனைச் சாவடிகளிலும் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு பணியினை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்வு மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஓராண்டாக 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. சிக்கிய கலெக்டரின் நேர்முக உதவியாளர்.. திருவள்ளூரில் பரபர!