Tamilnadu

தற்குறி அரசால் இன்னும் என்னென்ன வகையில் தமிழ்நாடு சீரழியப் போகின்றனவோ? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி!

த.வெ.க. அரசு தனது உறுதியான வாதங்களை முன்வைக்காததால், திருப்பரங்குன்றத்தில் உள்ள கல்தூணில் CRPF பாதுகாப்புடன் தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் விமர்சித்துள்ளனர். அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில், இந்த உத்தரவு அமைதியைக் குலைக்க வழிவகுக்கும் என்பதே இவர்களின் முக்கியக் கருத்தாக இருக்கிறது.

இந்நிலையில், "தமிழ்நாட்டின் தனித்துவமான மாண்புகள் த.வெ.க. அரசால் இன்னும் என்னென்ன வகையில் சீரழியப் போகின்றனவோ?" என தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி விமர்சித்துள்ளது.

இது குறித்து திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ஐயோ என்று உச்சநீதிமன்றம் விஜய் அரசைக் கலாய்த்து, திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றும் விவகாரத்தில் உத்தரவுகளை வழங்கியுள்ளது. நேற்றுதான் கோமாளிபோல, ‘ஐயோ.. அவர் வந்துட்டாரே.. கலாய்ப்பாரே” என்று கடன் வாங்கி காமெடி செய்து பல்பு வாங்கினார் விஜய். இன்று தமிழ்நாட்டையே பதற்றத்தில் ஆழ்த்தும் தீர்ப்பு வந்துள்ளது. இந்தத் தீர்ப்பு, தமிழ்நாட்டின் அமைதியிலும் ஒற்றுமையிலும் நம்பிக்கையுள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படி ஒரு தீர்ப்பு அமைவதற்கு தற்குறி அரசின் தப்பிலித்தனமான சொத்தை வாதங்களே காரணமாகும்.

மரபார்ந்த ஆன்மீக நம்பிக்கைக்கு மாறாக, அரசியல் காரணங்களுக்கானத் தூண்டுதல்களை சுட்டிக்காட்டி, இதனால் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் என்பதை முன்வைத்து, முந்தைய திராவிட மாடல் அரசு போல என்று துணிச்சலாக எதிர்க்கும் முதுகெலும்பு விஜய் அரசுக்குக் கிடையாது. அறநிலையத்துறை, வருவாய்த்துறை, தொல்லியல்துறை, சட்டத்துறை இடையிலான ஒருங்கிணைப்பில்லாத வாதங்களே உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன. மறுஆய்வு மனு தாக்கல் செய்வதில்கூட சட்டத் தெளிவில்லாததால், தாமதமாகவே தாக்கல் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்த உத்தரவின்படி நவம்பர் 24 அன்று மலை உச்சியில் உள்ள தூணில் விளக்கு ஏற்றாதது தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைதான் காரணம் என்பதை அரசின் நிலைப்பாடாக முன்வைக்காமல், மதுரை மாவட்ட ஆட்சியரையும், அறங்காவலர்களையும் பலிகடாவாக்கியது கோழைத்தனமான விஜய் அரசு.

கோர்ட் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதைக் கூட உணராத-உணரத் தெரியாத தற்குறிக் கூட்டம், தனது எஜனமானர்களான டெல்லியில் ஆள்பவர்களின் விருப்பத்திற்கேற்ப குனிந்து-வளைந்து கொடுத்து, சொதப்பலான வாதங்களை முன்வைத்ததன் விளைவாகத்தான், திருப்பரங்குன்றத்தில் மரபுக்கு மாறாக விளக்கேற்றும் முயற்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தனித்துவமான மாண்புகள் இந்தத் தற்குறி அரசால் இன்னும் என்னென்ன வகையில் சீரழியப் போகின்றனவோ?

Also Read: தவெக எம்எல்ஏ மீது எந்த புகாரும் இல்லையா? ; எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதில் என்ன தவறு? : முரசொலி கேள்வி!