Tamilnadu
கார்த்திகை தீபத்தில் கோர தீ விபத்து... பிஞ்சு குழந்தை உடல் கருகி பலி.. - சோகத்தின் பின்னணி என்ன?
சென்னை மாதவரம் கணபதி தோட்டம் பகுதியில் லாரி ஓட்டுநர் அறிவழகன் - அனுசியா தம்பதி. வாடகை வீட்டில் வசித்து வரும் இவர்களுக்கு ஒன்றரை வயதில் தன்சிகா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த சூழலில் அறிவழகன் தனது லாரியின் தேவைக்காக வாங்கி வந்த டீசலை கேனில் வீட்டில் வைத்திருந்துள்ளார்.
இந்த சூழலில் கார்த்திகை தீபத்தன்று வீட்டில் அகல் விளக்குகள் ஏற்றியபோது, எதிர்பாராத விதமாக டீசல் கேனில் தீப்பற்றி வீடு முழுவதும் பரவியதாக தெரிகிறது. இதில் வீட்டிற்குள் சிக்கிய அறிவழகன் மற்றும் அவரது ஒன்றரை வயது மகள் தன்ஷிகா ஆகியோர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவம் நடந்தபோது குழந்தையின் தாயார் அனுசுயா வீட்டிற்கு வெளியே இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மாதவரம் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த தீ விபத்து குறித்து மாதவரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, குடியிருப்பு வீட்டில் டீசல் சேமித்து வைத்திருந்தது மற்றும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை தீபத் திருநாளில் ஒரே குடும்பத் தில் ஒன்றரை வயது குழந்தை மற்றும் அவரது தந்தை என இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அரை மணி நேரம் மின்வெட்டு: டார்ச் வெளிச்சத்தில் ஆய்வு மேற்கொண்ட வன்னியரசு!
-
பாலியல் குற்றவாளியை காப்பாற்றிய குற்றவாளி முதலமைச்சர் விஜய் : முரசொலி கடும் சாடல்!
-
எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சுக்களை நீக்கிய உத்தரவு.. நீதிமன்றத்தில் முறையிடுவோம்!: திமுக வழக்கறிஞர் அணி!
-
“டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்க!” : மனிதக் கழிவு வீசப்பட்ட விவகாரத்தில் உத்தரவு!
-
தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷைக் கைது செய்.. உருவபொம்மையை எரித்து திமுக மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டம்!