Tamilnadu

“வாய்வலிக்க வக்காலத்து வாங்கியது வெட்கக்கேடு“ : மாணிக்கம் தாகூருக்கு தி.மு.க கண்டனம்!

கள்ளக்குறிச்சி மாவட்டப் பெண் ஆட்சியருக்குத் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், செல்போனில் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதுடன், இரவில் ஆட்சியர் வீட்டுக்கே நேரில் சென்று தொந்தரவு செய்ததாகப் புகார் எழுந்தது.

இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், அரசியல் கட்சிகள், மகளிர் அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளதாக 'தி இந்து' நாளேட்டில் இன்று செய்தி வெளியாகியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் சர்ச்சையானபோது, "அருள் விக்னேஷ் பாவம்; எந்த ஆதாரமும் இல்லாமல் வாட்ஸ்அப் வதந்திகளை வைத்து அவர் மீது விசாரணை நடத்தக் கூடாது" என்று அப்போது முட்டுக்கொடுத்தார் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்.

தற்போது அருள் விக்னேஷ் தவறு செய்துள்ளது நிரூபணமானவுடன் மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க வேண்டும், த.வெ.க எம்.எல்.ஏ மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தர்பல்டி அடித்துள்ளார்.

இந்நிலையில் "கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பாவம்" என்று கூறி அவரை ஏதோ ஒன்றும் அறியாத சின்ன குழந்தை போல தன் இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டு காப்பாற்றப் பார்த்தது வெட்கக்கேடு என மாணிக்கம் தாகூருக்கு தி.மு.க கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தி.மு.க வெளியிட்டுள்ள சமூகவலைதளபதிவில், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, தவெக எம்.எல்.ஏ.வின் நடத்தை பற்றித் தெரிந்தவர்கள் என்பதாலோ என்னவோ, "புகார் அளிக்கப்படவில்லை", "புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கிறோம்" எனப் பட்டும் படமால் பேசி நழுவப் பார்த்தனர்.

ஆனால், அவர்களை எல்லாம் மிஞ்சும் விதத்தில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்ற “More loyal than the king” ஆக மாறி வாய்வலிக்க வக்காலத்து வாங்கியது யார் தெரியுமா?

த.வெ.க. அரசு தூக்கிப் போட்ட 2 அமைச்சர் பதவிக்காக த.வெ.க.வின் முரட்டு பக்தனாக மாறிய மாணிக்கம் தாகூர் அவர்கள்தான்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிலேயே கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி போன்றோர் அருள் விக்னேஷுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளிப்படையாக வலியுறுத்தினர்.

ஆனால், மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரோ "கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பாவம்" என்று கூறி அவரை ஏதோ ஒன்றும் அறியாத சின்ன குழந்தை போல தன் இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டு காப்பாற்றப் பார்த்தது வெட்கக்கேடு.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே த.வெ.க. அடிவருடிகளாகத்தான் மானஸ்தன் மாணிக்கம் தாகூர், மூளைவீங்கி பிரவீன் சக்ரவர்த்தி போன்றோர் செயல்பட்டனர். அதற்கான பரிசுதான் மாநிலத் தலைவர் பதவியும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியும்.

கூட இருந்தே குழிபறித்த இந்த நயவஞ்சக நரிகளின் துரோகம்தான் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியது. இனியும் வீழ்த்தப் போகிறது.

பனையூர் வாயிற்கதவருகே பாதுகாவலராக நிற்க வேண்டியவர்கள் எல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை வழிநடத்தினால் அந்தக் கட்சி முட்டுச் சந்தில்தான் போய் நிற்கும்” தெரிவித்துள்ளது.

Also Read: பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா Dummy CM? : உதயநிதி ஸ்டாலின் கேள்வி!