Tamilnadu
திருப்பரங்குன்றம் விவகாரம் : அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - விஜய்க்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக மலையின் கீழ்ப்பகுதியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
ஆனால், சில இந்துத்துவ அமைப்பினர் திருப்பரங்குன்றத்தில் மதநல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்காவிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள பழமையான கல்தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில், 2025-ஆம் ஆண்டு டிசம்பரில் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் மலைமீது ஏறி தீபம் ஏற்ற முற்பட்டனர். இதனால் திருப்பரங்குன்றத்தில் பதற்றம் நிலவியது.
அப்போது முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், இந்த விவகாரத்தைத் திறம்படக் கையாண்டார். எவ்விதமான அசம்பாவிதமும், மதநல்லிணக்கத்திற்குப் பாதிப்பும் ஏற்படாத வகையில் இப்பிரச்சினையைக் கையாண்டார்.
இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க. அரசு மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில், இந்த ஓராண்டு மட்டும் ஒருமுறை தீபம் ஏற்றிக்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.
இதனைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது.
த.வெ.க. அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பதை முதலமைச்சர் விஜய் விளக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
புதிய பாதை இல்ல... விஜய் காட்டுவது ‘புதிய போதை’... - பட்டியலோடு சரமாரியாக விமர்சித்த திமுக இளைஞரணி!
-
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எப்படி பாதியில் கைவிட முடியும்? : த.வெ.க அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
-
பெரியார் நூலக விவகாரம் - பொய் சொன்ன ராஜ்மோகன் மன்னிப்பு கேட்க வேண்டும் : DMK IT Wing வலியுறுத்தல்!
-
செல்போன் திருடன் எனக் கேலி செய்ததால் ஆத்திரம் : நண்பனை வெட்டிக் கொன்ற இளைஞர்கள்!
-
“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நம்பிக்கையை தகர்த்திருக்கிறது” : ஜவாஹிருல்லா!