Tamilnadu
சொந்தக் கட்சிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகி மீது புகார்: அலட்சியம் காட்டிய தவெக எம்.எல்.ஏ!
தவெக ஆட்சிக்கு வந்த ஆறே மாதங்களில் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமடைந்துள்ளது. குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கொலை, கொள்ளை, சிறுமிகள் கடத்தல், தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தல் எனப் பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவற்றில் பல்வேறு சம்பவங்களில் தவெகவைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகளாக இருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம், தவெக பெண் நிர்வாகிகளுக்கே அக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகளால் பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் வேதனையுடன் அளித்த பேட்டிகள் எனப் பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காரமடை பகுதியில் தவெக ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி மீது பெண் நிர்வாகி அளித்த பாலியல் புகாரைத் தொடர்ந்து, மூன்று பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காரமடை பகுதியில் தவெக ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பு வகிப்பவர் கருப்பசாமி. அதே பகுதியைச் சேர்ந்த தவெக முன்னாள் ஊராட்சிச் செயலாளரான பெண் நிர்வாகி, சில மாதங்களுக்கு முன்பு கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற தவெக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த தன்னை, தவெக ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி பாலியல் ரீதியாகவும், சாதி ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும், அவருக்குச் சிலர் ஆதரவாக இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பெண் நிர்வாகி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவம்பர் 12ஆம் தேதி புகார் மனு அளித்தார்.
இதையடுத்து, பெண் நிர்வாகியின் புகார் குறித்து மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமையிலான காவல்துறையினர் அவரது வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, காரமடை தவெக ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி உள்ளிட்ட மூன்று பேர் மீது பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்ளுதல், பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகி, ஏற்கெனவே மேட்டுப்பாளையம் தவெக எம்.எல்.ஏ சுனில் ஆனந்திடம் இது தொடர்பாகப் புகார் அளித்துள்ளார். அப்போது, புகாருக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், பெண் நிர்வாகியின் புகாரைக் கேட்ட தவெக எம்.எல்.ஏ சுனில் ஆனந்த், தொடர்ந்து குறை கூறிக்கொண்டே இருக்க வேண்டாம் என்றும், இது அவ்வளவு பெரிய முக்கியமான பிரச்சினை இல்லை என்றும் அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.
பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது பெரிய பிரச்சினை இல்லை என்ற தொனியில் தவெக எம்.எல்.ஏ அலட்சியமாகப் பேசியதாகக் கூறப்படும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read
-
பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தவெகவைச் சேர்ந்தவரின் கொடூரச் செயல்: வாக்குமூலத்தில் பகீர் தகவல்!
-
“மேகதாது அணை விவகாரம்; அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும்” : CM விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
‘தமிழ்நாடு’ என்ற பெயர்.. தி.மு.க ஆற்றிய பங்கு.. வரலாற்றை திரிப்பதா? : முரசொலி தலையங்கம் சீற்றம்!
-
இது ரியல் ஆட்சி அல்ல… ரீல்ஸ் ஆட்சி… த.வெ.க அரசுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி மதிப்பெண்!
-
“இவரது தீர்ப்பால்தான் மணிப்பூர் கலவரமே வெடித்தது.. அப்படிப்பட்டவரை நியமிப்பதா?”- தவெக-வுக்கு CPI கண்டனம்!