Tamilnadu

சென்னை மக்களே.. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு : முழு விவரம் உள்ளே!

தீபாவளிப் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு மெட்ரோ ரயில் நிர்வாகம், சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் நேர அளவை மாற்றி அமைத்து அறிவித்துள்ளது.

அதன்படி, நீலம் - பச்சை வழித் தடத்தில் நவம்பர் 09-ஆம் தேதி காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒருமுறையும், மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒருமுறையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

அதேபோல் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒருமுறையும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் வழித்தடத்தைப் பொறுத்தளவு காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 09-ஆம் தேதி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். பயணிகள் அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Also Read: “இந்த 7 பிரச்சினைகளுக்கும் பதில் வேண்டாமா? தீர்வு வேண்டாமா?” : த.வெ.க அரசுக்கு டி.ஆர்.பி.ராஜா கண்டனம்!