Tamilnadu
ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41-க்கு வாங்கும் தவெக அரசு : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு!
நடப்பு அக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட மின் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக, தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் வெளிச்சந்தையில் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை :ரூ.35 என்ற அதிக விலைக்குக் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. த.வெ.க அரசின் இந்த முடிவிற்கு ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பின.
இந்நிலையில், வரும் டிசம்பர் 2026 முதல் மே 2027 வரையிலான காலகட்டத்தில் மாநிலத்தின் உச்சகட்ட மின்தேவையை எதிர்கொள்வதற்காக, வெளிச்சந்தையில் இருந்து 2,100 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.41.50 என்ற, தமிழக வரலாற்றிலேயே இல்லாத புதிய உச்ச விலைக்குக் கொள்முதல் செய்ய முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.
மக்கள் பணத்தை வீணடிக்கும் வகையில் மிக அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் த.வெ.க அரசின் இந்த அதிரடி முடிவுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா?
நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் DUMMY CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா?
இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள்.
இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“சிறைச்சாலையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடியது சாதாரணமானதல்ல!” : பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!
-
Prison Break-உம் தொடங்கிவிட்டது : ஆனோல், முதலமைச்சரோ Sleep Modeல் மட்டும்தான் இருக்கிறார் - DMK IT WING!
-
17 கைதிகள் தப்பியோட்டம்; சிறைத்துறை நிர்வாகத்தின் தோல்விக்கு யார் பொறுப்பு? : எம்.எச்.ஜவாஹிருல்லா கேள்வி!
-
செங்கல்பட்டு முதல் தேனி வரை... 5 மாதத்தில் 50 கைதிகள் தப்பியோட்டம்... சீர்கெட்டு போன காவல்துறை.. விவரம்!
-
“Lawlessness-ன் அடையாளமாக தவெக ஆட்சி.. மூடர் கூட்டத்தின் ஆட்சி” : உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!