Tamilnadu
செங்கல்பட்டு முதல் தேனி வரை... 5 மாதத்தில் 50 கைதிகள் தப்பியோட்டம்... சீர்கெட்டு போன காவல்துறை.. விவரம்!
தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் வருகிறது. தினந்தோறும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொள்ளைகள், கொலைகள் என்பதோடு, குழந்தைகளும் காணாமல் போய் வருகின்றனர். இப்படியாக நடைபெறும் தொடர் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்காத விஜய் அரசு, எல்லாவற்றுக்கும் திமுக மீதே பழியை போட்டு வருகிறது.
பட்டப்பகலில் நடக்கும் கொலை சம்பவங்கள் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இவ்வாறான குற்றச்செயல்களில் தவெக-வினரே ஈடுபடுவது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இப்படியான சூழலில் சிறைகளில் இருந்து கைதிகள் தப்பியோடுவதும் தற்போது வாடிக்கையாகி வருகிறது.
தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து இந்த 5 மாதங்களில் சுமார் 50 கைதிகள் தப்பியோடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அதன் விவரம் வருமாறு :-
* 21 ஜூன் :
செங்கல்பட்டு - சிறார் கூர்நோக்கு இல்லம் - 5 பேர்
* 01 ஜூலை :
பழனிசெட்டிபட்டி, தேனி - காவல் நிலையம் - 1
* 02 ஜூலை :
பாளையங்கோட்டை, திருநெல்வேலி - மத்திய சிறை - 1
* 12 ஜூலை :
செங்கல்பட்டு - சிறார் கூர்நோக்கு இல்லம் - 12 பேர்
* 13 - 14 ஆகஸ்ட் :
செங்கல்பட்டு - சிறார் கூர்நோக்கு இல்லம் - 11 பேர்
* 10 அக்டோபர் :
ஆசாரிப்பள்ளம், கன்னியாகுமரி - அரசு மருத்துவமனை (போக்சோ கைதி) - 1
* 20 அக்டோபர் :
புழல், சென்னை - மத்திய சிறை - 1
* 21 அக்டோபர் :
புழல், சென்னை - மத்திய சிறை (போக்சோ குற்றவாளி) - 1
* 26 அக்டோபர் :
தேனி - மாவட்டச் சிறை காவலர்களைத் தாக்கி - 17 பேர்
இதில் அதிகபட்சமாக செங்கல்பட்டு, சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 28 பேர் தப்பியோடியுள்ளனர். குற்றங்களை தடுக்க தான் தவெக அரசுக்கு வக்கில்லை என்றால், குற்றவாளிகளை பாதுகாக்க கூட விஜய் அரசுக்கு திரணியில்லை என்றும், மக்கள் பாதுகாப்பில் இந்த அரசு மிகவும் மெத்தனமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
Also Read
-
“Lawlessness-ன் அடையாளமாக தவெக ஆட்சி.. மூடர் கூட்டத்தின் ஆட்சி” : உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
நண்பர்களுடன் மது Party-ன் போது பயங்கரம்... கொடூரமாக கொல்லப்பட்ட புதுச்சேரி நபர்.. ஆரோவில்லில் ஷாக்!
-
SIR குளறுபடிகளை எப்போதுசரி செய்யப் போகிறீர்கள்? SSR குழப்பம் இல்லாமல் எப்படி நடைபெறும்? : முரசொலி!
-
வலிப்பு வந்ததாக நாடகம்... காவலரின் 2 பவுன் சங்கிலியை பறித்து தப்பியோடிய 17 கைதிகள்.. தேனியில் ஷாக்!
-
“1995-க்குப் பிறகு தவெக அரசில்.. Breaking Bad-ஐ தொடர்ந்து Prison Break” : மு.க.ஸ்டாலின் காட்டம்!