Tamilnadu

ஆம்னி பேருந்துகளில் 8 மடங்கு கட்டணம் : தவெக அமைச்சர் இன்னும் சாப்பிட்டு முடிக்கவில்லையா? - DMK IT WING!

ஆயுதபூஜை, விஜயதசமி என அடுத்தடுத்து தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை இருப்பதால், பொதுமக்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உதாரணத்திற்கு, சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு ரூ.3,759-க்கும், சென்னையிலிருந்து கோவைக்கு ரூ.3,860-க்கும் பயணச்சீட்டுகள் விற்பனையாகின்றன.

ஆனால், த.வெ.க அரசோ கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுப்போம் என வெறும் வாய்மொழியாக மட்டுமே கூறிவருகிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.

இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் 8 மடங்கு பகல் கொள்ளை நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு த.வெ.க அரசு இதற்குத் துணை போகிறதா?" என தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் ”விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் வழக்கத்தை விட 6 முதல் 8 மடங்கு வரை கொடூரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசுப் பேருந்து கட்டணத்தோடு ஒப்பிட்டால் இது 12 முதல் 14 மடங்கு அதிகமாகும்!

போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களே இன்னும் சாப்பிட்டு முடிக்கவில்லையா? எப்போது தான் இதை சரி செய்யப் போகிறீர்கள்?

ஆம்னி பேருந்துகாரர்கள் இப்படிப் பகல் கொள்ளை அடிப்பதைத் தடுக்க நேரில் வந்து ஆய்வு செய்வீர்களா? இல்லை, இன்னும் ஆம்னி பேருந்து முதலாளிகளிடமும், நெடுஞ்சாலை உணவகங்களிடமும் 'கமிஷன்' வாங்கும் பிஸியிலேயே இருக்கிறீர்களா?

பண்டிகை நெருங்கும் முன்பே முன்கூட்டியே திட்டமிட்டு, கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கி, இந்தக் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தாத தவெக அரசின் இந்த நிர்வாகக் கையாலாகாதத்தனத்திற்குப் பின்னணியில் இருக்கும் 'கமிஷன் டீலிங்' என்ன?" என தெரிவித்துள்ளது.

Also Read: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரை ஏற்க Cheap CM-க்கு மனமில்லை! - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!