Tamilnadu

“ஊழல் Deal முடிக்க பக்கத்து மாநிலத்துக்கு பறந்து இருக்கும் பஞ்ச் டயலாக் CM” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

த.வெ.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையால் பணவீக்கத்திலும், விலைவாசி உயர்விலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இது ஒருபுறம் என்றால், மற்றொரு புறம் அறிவிக்கப்படாத மின்வெட்டு.

தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லை எனப் பொய் சொல்லும் த.வெ.க. அரசோ, தற்போது யூனிட்டுக்கு 35 ரூபாய் கொடுத்து வெளிச்சந்தையில் மின்சாரத்தை வாங்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவிலேயே இதுவரை எந்த மாநிலமும் வாங்காத அதிக விலைக்கு வாங்கும் த.வெ.க. அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த ஊழல் deal முடிக்கத்தான் பக்கத்து மாநிலத்துக்கு பறந்து இருக்கிறாரா பஞ்ச் டயலாக் சி.எம்? என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் ”கழக ஆட்சிக்காலத்தில் குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்கியதை முறைகேடு என்று சொல்லி டென்டரை ரத்து செய்த இந்த Circus அரசு, இன்றைக்கு 1 Unit மின்சாரத்தை மிக மிக அதிக விலைக்கு ரூ.35 கொடுத்து வாங்க இருக்கிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் இப்படி அதிக விலைக்கு மின்சாரம் வாங்குகிறது என்றால், அந்த அளவிற்கு நிர்வாகத்திறனில் inefficient ஆக இருக்கிறார் இந்த Dummy முதலமைச்சர்.

இப்படி கொள்ளை அடிக்கத்தான், ‘காற்று அடிக்கவில்லை - மழை வரவில்லை - பஞ்சாப்ல கூட இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்துச்சு’ என்றெல்லாம் கட்டுக்கதைகளைச் சொல்லி இத்தனை நாட்களாக இந்த ஆட்சியாளர்கள் செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கினார்களா?

இந்த ஊழல் deal முடிக்கத்தான் பக்கத்து மாநிலத்துக்கு பறந்து இருக்கிறாரா பஞ்ச் டயலாக் சி.எம்?

ஏற்கனவே மின் கட்டணம் என்கிற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை அடிக்கும் இந்த வெட்கங்கெட்ட சர்க்கார், அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்து அதையும் பொதுமக்கள் தலையில் கட்டப் போவதை ஒரு போதும் ஏற்க முடியாது.

விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு போய் நிறுத்தியுள்ள இந்தக் கோமாளிக்கூட்டம், இன்னும் எத்தனை தூரம் மக்களை வதைக்கவிருக்கிறது.

மாற்றம் மாற்றம் என்று சொல்லி, நாட்டின் நம்பர் 1 டுபாக்கூராக மாறி நிற்கும் இந்த முதலமைச்சருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்" என தெரிவித்துள்ளார்.

Also Read: “எல்லாவற்றையும் செய்துவிட்டு வீட்டுக்குப்போய் ட்வீட்டா” : முதல்வர் விஜய்க்கு இ.பரந்தாமன் கடும் கண்டனம்!