Tamilnadu

பட்டியலின மக்களைக் காலில் விழவைத்து அராஜகம் ; சாதிவெறிக்குத் துணை போகும் தவெக அரசு - DMK IT WING கண்டனம்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பெரும்பாளி கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரின் இறுதிச் சடங்கு நடந்துள்ளது. அவரது உடலைப் பொது மயானத்தில் அடக்கம் செய்ய எடுத்துச் சென்றபோது, அங்கு திரண்ட மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஆதிக்க சக்தியினர் அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து தடுத்துள்ளனர்.

மேலும் உடலை அடக்கம் செய்ய வழிவிடாமல் மிரட்டல் விடுத்துள்ளனர். அப்போது, பட்டியலினத்தைச் சேர்ந்த சிலர் அங்கு தடுத்தவர்களின் காலில் விழுந்து கெஞ்சி மன்றாடியுள்ளனர். இந்த கொடூர சம்பவம் பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு முன்பே நடந்துள்ளது.

காவல்துறையினரும், அதிகாரிகளும் காலில் விழுவதை கண்டும் காணாமல் இருந்துள்ளது. இந்த தீண்டமை சம்பவம் தொடர்பான வீடியோ தற்போத சமூகவலைதளத்தில் வைரலாகி கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் சாதிவெறிக்குத் துணை போகிறதா 'டம்மி' விஜய்யின் தவெக அரசும் அதன் காவல்துறையும்? என தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”சாதிவெறிக்குத் துணை போகிறதா 'டம்மி' விஜய்யின் தவெக அரசும் அதன் காவல்துறையும்? ஈரோடு பெரும்பள்ளி கிராமத்தில், சட்டம் - ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறையே நின்று வேடிக்கை பார்க்க, பட்டியலின மக்களைக் காலில் விழவைத்த மனிதத்தன்மையற்ற அராஜகம் அரங்கேறியுள்ளது!

சட்டமன்றத்தில் 'சேரியில்லா ஊருக்குள்ளே பிறக்க வேணும் பேரப்பிள்ளை' என மற்றவர் எழுதிய பாடலுக்கு விஜய்க்காகப் பெருமை பேசிய, போலி சமூகநீதி பேசும் சந்தர்ப்பவாத கூட்டணியின் அமைச்சரும் இது குறித்து வாய்திறக்கவில்லை." என கண்டனம் தெரிவித்துள்து.

Also Read: திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!