Tamilnadu

“தவெக அரசு இதோடு தனது கொட்டத்தை அடக்கிக்கொள்ள வேண்டும்” : இந்தி திணிப்பு - தி.மு.க ஐடி விங் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசு, ஒரு மினி பாஜகவை போலவே செயல்படுவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். அதற்கு ஏற்றாற்போல் அவரது நடவடிக்கையும் இருந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் கவனம் செலுத்தாத தவெக, பாஜக பாணியான பிற கட்சி எம்.எல்.ஏ-க்களை வாங்குவதிலேயே குறியாக இருந்து வருகிறது.

அதோடு மோடி ஆட்சியின் அவலங்கள் குறித்து விமர்சித்தால், எல்லாவற்றுக்கும் காரணம் காங்கிரஸ் என கூறும் மோடியை போலவே, தற்போது விஜய் ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டினால், திமுக திமுக என்றே கதறி வருகின்றனர் விஜய் மற்றும் அவரது கட்சியினர். எல்லாவற்றுக்கும் பாஜக பாணியை பின்பற்றும் விஜய் கட்சி, அண்மையில் கூட பல்வேறு துறைகளை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதில் முனைப்பு காட்டியது.

அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் இந்தியை மெதுவாக ஊடுருவ வைக்கவும் முனைப்பு காட்டி வருவது வெட்ட வெளிச்சமாக அம்பலமாகியுள்ளது.

அதாவது தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையில் இருக்கும் ஊர்களின் பெயர்கள் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பெயரில் மட்டும் தமிழக என வைத்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் இந்த அரசு உடனடியாக தன்னை திருத்திக் கொள்ள வேண்டும் என தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி விமர்சித்துள்ளது.

இது குறித்து தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்"தனுஷ்கோடியில் ‘ராம யாத்திரை’ தொடங்கி நெடுஞ்சாலை துறையின் பெயர் பலகைகளில் ஹிந்தி திணிப்பது வரை பா.ஜ.க.வின் தமிழ்நாட்டு கிளையாகவே செயல்பட்டு வருகிறது டம்மி முதலமைச்சரின் த.வெ.க அரசு.

இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்க பா.ஜ.க செய்து வரும் அதே அட்டுழியங்களைத்தான், வி.சி.க + காங்கிரஸ் மற்றும் பலரின் உதவியுடன் தமிழ்நாட்டில் செய்து வருகிறார்கள்.

தமிழ்­நாடு தன் உயி­ரி­னும் மேலா­னத் தமி­ழை­யும் அதன் பண்­பாட்­டை­யும் உயி­ரைக் கொடுத்து காப்­பாற்­றி­யுள்­ளது என்பதுதான் கடந்தகால வரலாறு!

பெயரில் மட்டும் தமிழக என வைத்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் இந்த அரசு உடனடியாக தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்; தனது கொட்டத்தை அடக்கிக்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளது.

Also Read: இந்தியில் ஊர் பெயர்கள்... எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்... உடனே 'U Turn' எடுத்த த.வெ.க.. - பின்னணி?