Tamilnadu
மின்வெட்டால் 5 நாட்களில் ரூ.40 கோடி இழப்பு : த.வெ.க அரசுக்கு சுட்டிக்காட்டிய மு.வீரபாண்டியன்!
மின்தட்டுப்பாட்டை போக்க ஒன்றிய அரசின் பொதுத் தொகுப்பிலிருந்து பெறப்படும் மின்சாரத்தை அதிகரிக்க வேண்டும் என த.வெ.க அரசுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டுக் காரணமாக தொழிற்சாலைகள், மின்சார பம்பு செட்டுகளை நம்பியுள்ள விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளன. மின்வெட்டால் கோவையில் மட்டும் உற்பத்தி பாதிப்பால் கடந்த நான்கு நாட்களில் ரூபாய் 40 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பிளாஸ்டிக், ஜவுளி, என்ஜினீயரிங் தொழிற்சாலைகளில் உற்பத்தி இழப்பு மற்றும் மூலப்பொருட்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளாதாகக் கூறப்படுகிறது. காலாண்டுத் தேர்வுகளுக்காகப் படிக்கும் மாணாக்கர்களும் படிக்க முடியாமல் கடும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
அரசுக்கு சொந்தமான அனல் மின்சார நிலையங்கள் அவற்றில் நிறுவப்பட்ட திறனை விட மிகக் குறைவாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதும், பொதுத்தொகுப்பிலிருந்து வாங்கப்படும் மின்சாரம் 2 ஆயிரம் மெகாவாட்டிலிருந்து 1500 மெகாவாட்டாக குறைக்கப்பட்டிருப்பதும், மின் பயன்பாடு அதிகரித்திருப்பதும் மின்தட்டுப்பாட்டிற்கும், மின் வெட்டிற்கும் காரணமென மின்சாரத்துறை சார் நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனவே, மின்தட்டுப்பாட்டை போக்க ஒன்றிய அரசின் பொதுத் தொகுப்பிலிருந்து பெறப்படும் மின்சாரத்தை அதிகரிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் அதிகரித்துவரும் மின்சாரத் தேவைக்கு ஏற்ப, புதிய மின்நிலையங்களை உருவாக்க, தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் புதிய மின் நிலையங்களை உருவாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
Also Read
-
“ஜெம் வீரமணிக்கும் திமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை... நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக அரசு”: ரகுபதி பதிலடி!
-
காலை உணவுத் திட்டம் - முதல் நாளே பட்டினியோடு குழந்தைகள்: த.வெ.க அரசுக்கு தி.மு.க ஐடி விங் கடும் கண்டனம்!
-
டெல்லியில் அதிர்ச்சி: துப்பாக்கி முனையில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்முறை!
-
“சுனாமியில் அதிகம் பாதிக்கப்பட்ட இடம்தான் இது.. யாராவது இதை தேர்வு செய்வார்களா?” - முரசொலி தாக்கு!
-
த.வெ.க.வின் நாடகத்தால் நடைபெறும் இடைத்தேர்தல் - தக்க பாடம் புகட்டும் முனைப்பில் மக்கள்!