Tamilnadu

முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!

சென்னை, பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது பிளாக் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆறு நாட்களாக தண்ணீர் வரவில்லை என்று கூறி அப்பகுதி மக்கள் கண்ணதாசன் நகர் இபி சந்திப்பு அருகே இன்று (செப்.12) காலை 11 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் மீனாம்பாள் சாலை சிட்கோ மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருப்பினும் பொதுமக்கள் தண்ணீர் வந்தால் தான் கிளம்புவோம் என்று காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நீண்ட இழுபறிக்கு பிறகு குடிநீர் வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட இடங்களில் தண்ணீர் கிடைக்க வசதி செய்வதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் உறுதி அளித்ததன் அடிப்படையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு, குடிநீர் பிரச்சனை என மக்கள் அல்லல்பட்டு வரும் வேளையில் இதுகுறித்து சற்றும் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என yஆருமே கவலையில்லாமலும், மக்களின் நிலைகுறித்த எந்த அக்கறையும் இல்லாமல் இருப்பதாக மக்கள் கொந்தளிப்புடன் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Also Read: தனியார் பல்கலை. திருத்த மசோதா நிறைவேற்றம்.. சமூகநீதியை சீர்குலைக்கும் தவெக அரசு - கோவி. செழியன் கண்டனம்!