Tamilnadu
கிரிக்கெட் விளையாடியபோது ... இளைஞருக்கு ஏற்பட்ட சோகம் : நடந்தது என்ன?
விழுப்புரம் அருகே உள்ள சாலாமேடு பகுதியில் உள்ள மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்த அஜிஸ்கான் என்ற நபர் பந்து வீசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கிச் சுருண்டு விழுந்தார்.
உடனடியாக அங்கிருந்த சக வீரர்கள் அவரை மீட்டு, விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அஜிஸ்கானைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
மேலும், அவர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் உடல் அவரது குடும்பத்தாரால் வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறப்பதா? : இரட்டை வேட தவெக அரசுக்கு கீதா ஜீவன் கடும் கண்டனம்!
-
த.வெ.க.வின் நிர்வாகத் தோல்வியைக் கண்டித்து சென்னையில் தி.மு.க ஆர்ப்பாட்டம்! : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
-
“மதத்தைக் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூகநீதிக்கு எதிரானது !” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“விளம்பர வெறியால் கடைமடையில் கருகும் பயிர்கள்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!
-
திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மின்சார தட்டுப்பாடு... அடுக்கடுக்கான புகார்களோடு அம்பலப்பட்ட தவெக அரசு!