Tamilnadu
நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன : உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
என் உழைப்புக்கு உறுதுணையாக, காலநேரம் பாராது - கண் துஞ்சாது அவர் பணியாற்றிய காட்சிகளெல்லாம் நினைவலைகளாய் என்னுள் எழுந்து, நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன; துயரை அதிகரிக்கின்றன என உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவுக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
என்னுடைய உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் அவர்கள் மறைவெய்திய செய்தியால் மிகவும் மனம் வருந்தி நிற்கிறேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் சென்னை மேயராகப் பொறுப்பு வகித்தபோது, மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி, பின்னர் அந்தப் பொறுப்பிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, என்னுடைய உதவியாளராக நெடுங்காலம் பணியாற்றியவர் அவர். என் உழைப்புக்கு உறுதுணையாக, காலநேரம் பாராது - கண் துஞ்சாது அவர் பணியாற்றிய காட்சிகளெல்லாம் நினைவலைகளாய் என்னுள் எழுந்து, நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன; துயரை அதிகரிக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாகப் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த அவர், அண்மையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்று நீடுதுயில் கொண்டுவிட்டார்.
பழகுதற்கினிய குணம் கொண்ட ஹரிகிருஷ்ணன் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய ஆறுதலை உரித்தாக்குகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“Comeback கொடுப்பதில் நாம் Specialist.. புதுமுகங்களுக்கு பொறுப்பு” : செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கிளைக் கழகச் செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரை... மறுசீரமைக்கப்படும் கழகம்.. புதிய மாற்றங்கள் என்ன?
-
வரலாறு பேசும் வீதிகள்... பழமையும் புதுமையும் சங்கமிக்கும் சீர்மிகு சென்னை ! #ChennaiDay
-
தொகுதி மறுவரையறை - “ஒரே வாரத்தில் பல்டி... காங்கிரஸ் முகத்தில் கரி பூசிய விஜய்”: முரசொலி கடும் விமர்சனம்!
-
தவெக ஆட்சியில் மின்சாரத்துறையின் அவலம் - பேரவையில் புட்டுப்புட்டு வைத்த செந்தில் பாலாஜி!