Tamilnadu
தமிழ்த்தாயையே தலைகுனியச் செய்துவிட்டீர்களே CM sir? : முன்னாள் சபாநாயகர் அப்பாவு கண்டனம்!
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதை அடுத்துத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சைக்கு உள்ளாகியே வருகிறது.
வழக்கமாக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்தான் முதலில் பாடப்படும். ஆனால், முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற விழாவில் 'வந்தே மாதரம்' பாடலுக்கு முதலிடம் வழங்கப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்தைப் பிடித்தது. அன்று முதல் தமிழ்த்தாய் வாழ்த்து த.வெ.க ஆட்சியில் அவமதிக்கப்பட்டே வருகிறது.
தற்போது, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் தமிழையும் , தமிழ்மக்களையும் அவமானப் படுத்தும் உங்கள் ஆட்சி தமிழ்நாட்டிற்குத் தேவையா? என த.வெ.க அரசுக்கு முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அப்பாவு வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,"தமிழ்த்தாய் வாழ்த்தை உலகிற்கு தந்த மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் அமைந்த நெல்லை பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்கு தள்ளி, துணை வேந்தரை மிரட்டிய ஆளுநர் செயலை நான் ஏற்கனவே கண்டித்திருக்கிறேன்.
தன்னிச்சையாக துணைவேந்தர்கள் கூட்டத்தை ஆளுநர் ரவி கூட்டியபோது துணிவுடன் செயல்பட்ட மு.க.ஸ்டாலின் துணை வேந்தர்கள் கூட்டத்தில் யாரையும் கலந்து கொள்ள விடாமல் செய்து துணை ஜனாதிபதியையே டெல்லிக்குத் திருப்பி அனுப்பி வைத்தவர் அப்போதைய முதல்வர்.
பா.ஜ.க ஆளும் மேற்குவங்கத்தில் கூட அந்த மாநிலப் பாடல் தான் முதலில் இசைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆளும் திறனும், தைரியமும், சமயோசித புத்தியும் உள்ள தலைமை இல்லாத ஜாதக ஆட்சி நடப்பதால் தமிழ்த்தாயையே தலைகுனியச் செய்துவிட்டீர்களே CM sir ?
விஜய் sir த.வெ.க கட்சியைக் கலைத்துவிட்டு பாஜக கட்சியில் சேர்த்திட ஜாதகம் கணிக்கப்பட்டுள்ளதா ? தமிழையும் , தமிழ்மக்களையும் அவமானப் படுத்தும் உங்கள் ஆட்சி தமிழ்நாட்டிற்குத் தேவையா? ” என கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!
-
முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!