Tamilnadu
தவெக நிர்வாகிகள் மீது குவியும் பாலியல் புகார்கள் - இதுதான் பெண்கள் பாதுகாப்பா? : தி.மு.க ஐடி விங் கேள்வி!
"தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை; த.வெ.க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்குப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்" என மேடைதோறும் பேசி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய் ஆட்சியில், அவரது கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் இருந்தே பெண்களைப் பாதுகாக்க வேண்டிய அவல நிலைதான் இன்று நீடிக்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், ராணிப்பேட்டை த.வெ.க மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்.அந்தப் புகாரில், கட்சியில் இணைவது தொடர்பாக மாவட்டச் செயலாளர் விஜய் மோகனிடம் பேசியபோது, அவர் தன்னை ஆபாசமாகப் படம் பிடித்து மிரட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனைக் குறிப்பிட்டு, "இதுதான் நீங்கள் பெண்களுக்கு வழங்கும் பாதுகாப்பா?" எனத் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் சமூகவலைதள பதிவில்,ஒரு சாதாரண ட்வீட்டுக்கே இரவோடு இரவாகக் கைது நடவடிக்கை பாயும் இந்த ஆட்சியில், ஒரு பெண் உங்கள் கட்சியின் உயர் நிர்வாகி மீதே வெளிப்படையாகப் பாலியல் புகார் அளித்தும் இதுவரை ஏன் எந்தக் கைது நடவடிக்கையும் இல்லை?
பெண்கள் பாதுகாப்பு என்று மேடைக்கு மேடை மூச்சு முட்டப் பேசும் விஜய் அவர்களே, பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சொந்தக் கட்சி நிர்வாகியைக் காப்பாற்றுவதுதான் நீங்கள் வழங்கும் பெண்கள் பாதுகாப்பா?
உங்கள் போலி நாடகங்களின் முகத்திரை இவ்வளவு விரைவாகக் கிழிந்து தொங்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை! உங்கள் யோக்கியதைக்கு இதற்கெல்லாம் என்ன முட்டு கொடுக்கப் போகிறீர்கள் டம்மி சிஎம் அவர்களே?” என கேள்வி எழுப்பியுள்ளது.
Also Read
-
“மாற்றம் எனச் சொல்லி.. அண்டப் புளுகை, ஆதவ் அர்ஜுனா புளுகாக மாற்றிவிட்டார்களோ?” : இ.பரந்தாமன் கண்டனம்!
-
ஒரே நாளில்... கோவையை தொடர்ந்து மதுரை.. கொலை நகரமாகும் தூங்கா நகரம்... வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!